×
 

ரகசிய இடத்தில் கமேனி-பெஷெஷ்கியான் சந்திப்பு? உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த சம்பவம்!

உயிருக்கு ஆபத்தான முறையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஈரான் அதிபர் பெஷெஷ்கியானை, அந்நாட்டு ஆட்சியாளர் அயதுல்லா மொஜ்தபா கமேனி நேற்று (ஆக.,09) சந்தித்து பேசியுள்ளார்.

ரகசிய அறையில் சில நிமிட சந்திப்பு... கமேனி பற்றி வெளியான பரபரப்பு தகவல்!

டெஹ்ரானில் ரகசிய இடத்தில் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியானை, அந்நாட்டு ஆட்சியாளர் அயதுல்லா மொஜ்தபா கமேனி சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொஜ்தபாவின் உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், இந்த சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் ஆட்சியாளர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், அதே தாக்குதலில் மொஜ்தபாவும் காயமடைந்ததாகவும், ரகசிய இடத்தில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டு வந்தது.

மொஜ்தபா இதுவரை பொதுவெளியில் தோன்றாததும் பல்வேறு சந்தேகங்களுக்கு காரணமாக அமைந்தது. சமீபத்தில், அவரை தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக இருப்பதாக ஈரான் அதிபர் பெஷெஷ்கியான் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இதனால், மொஜ்தபாவின் உடல்நிலை குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்தன.

இதையும் படிங்க: உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி மரணம் குறித்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி!! வீடியோ வெளியிட்டது ஈரான்!

இந்த சூழலில், நேற்று முன்தினம் மொஜ்தபா கமேனியை அதிபர் பெஷெஷ்கியான் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் இன்டர்நேஷனல் வெளியிட்ட செய்தியின்படி, டெஹ்ரானில் உள்ள ரகசிய இடத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதிபர் பெஷெஷ்கியான் ஒரே ஒரு முறை மட்டுமே மொஜ்தபாவை சந்தித்ததாகவும், இருட்டான அறையில் சில நிமிடங்கள் மட்டுமே சந்திப்பு நடந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்திப்பின்போது மொஜ்தபாவின் குரலை மட்டுமே கேட்க முடிந்ததாகவும், அவரை நேரடியாக பார்க்க முடியவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையா என்பது குறித்து சுயாதீனமான உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

இதற்கிடையே, மொஜ்தபா உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை காட்டும் வகையில், தனது ஆலோசகர்களுடன் அவர் ஆலோசனை நடத்துவது போன்ற 12 விநாடிகள் கொண்ட வீடியோவை ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

எனினும், அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, மொஜ்தபாவின் தற்போதைய உடல்நிலை என்ன என்பது உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக தெரியவில்லை. இதனால், ஈரான் ஆட்சியாளரின் உடல்நிலையை சுற்றியுள்ள மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதையும் படிங்க: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி நிலை கவலைக்கிடம்? எந்த நேரத்திலும் உயிரிழக்கக்கூடும்? பரபரப்பு தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share