×
 

இஸ்ரேல் மீது ஏவுகணை மழை! ட்ரம்பை கேலி செய்யும் ஈரான்! அப்போ பேச்சுவார்த்தை சும்மாதானா?

இஸ்ரேல் மீது ஏவுகணை மழை பொழிந்ததுடன், ஹார்முஸ் ஜலசந்தியின் கூட்டு நிர்வாகம் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்த கருத்தை ஈரான் கேலி செய்துள்ளது.

டெல்லி/தெஹ்ரான்: மேற்காசியப் போர் 26-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை மழையை பொழிந்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியின் கூட்டு நிர்வாகம் பற்றி பேசியதை ஈரான் கடுமையாக கேலி செய்துள்ளது.

கடந்த மாதம் 28-ம் தேதி அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்ததிலிருந்து, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. டிரம்ப் 48 மணி நேர கெடு விதித்த பிறகு, தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்துவதாக அறிவித்தார். மேலும், ஈரானுடன் பேச்சு நடத்தி வருவதாகவும், முன்னேற்றம் இருப்பதாகவும் கூறினார்.

ஆனால் ஈரான் இதை மறுத்து, “அமெரிக்காவுடன் எந்தப் பேச்சும் நடைபெறவில்லை” என்று தெரிவித்தது. அதே நேரத்தில், இஸ்ரேலின் முக்கிய நகரங்களான டெல் அவிவ், ஹைபா, ஈலாட் மற்றும் டிமோனா அணுசக்தி மையத்தை இலக்காகக் கொண்டு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது.

இதையும் படிங்க: மேற்காசிய போரை நிறுத்த அமெரிக்கா 15 அம்ச திட்டம்?! முன்மொழியும் பாக்.,! ஏற்குமா ஈரான்?!!

டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியை “கூட்டு நிர்வாகம்” செய்யலாம் என்று பேசியதை ஈரான் கடுமையாக கேலி செய்துள்ளது. ஈரானிய அதிகாரிகள், “ஹார்முஸ் எங்கள் இறையாண்மைக்கு உட்பட்டது. வெளிநாட்டு நிர்வாகம் என்பது கனவு” என்று பரிஹாசம் செய்தனர்.

இஸ்ரேல் தரப்பில், ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரைவில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதற்கிடையில், பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முயற்சி செய்து வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் ஈரான் அதிபருடன் பலமுறை பேசியுள்ளார். பாகிஸ்தான் முப்படைத் தளபதி அசிம் முனீர் டிரம்புடன் தொலைபேசியில் பேசியதாகவும், பேச்சு இஸ்லாமாபாத்தில் நடைபெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி இதை பெரும் பின்னடைவு என்று விமர்சித்துள்ளது. பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், “பாகிஸ்தான் ராஜதந்திரத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துள்ளது” என்று குற்றம் சாட்டினார்.

டிரம்ப் புதிய விளக்கம் அளித்துள்ளார். “ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் தான் ஆலோசனை வழங்கினார்” என்று கூறிய டிரம்ப், தற்போது ஹெக்செத் ஈரானுடன் பேசி வருவதாகவும், விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையும் தெரிவித்தார்.

ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி அமெரிக்காவுடன் பேச்சு நடத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும், நாள் முழுதும் பேச்சு நடைபெற்றதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றன.

இதையும் படிங்க: மேற்காசிய போர் பதற்றம்! அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு! முதல் நாடாக அவசரநிலையை பிரகடனப்படுத்தியது பிலிப்பைன்ஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share