அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தையா? நெவர்! இறுமாப்பு காட்டும் ஈரான்! நீடிக்கும் போர் பதற்றம்!
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி தெரிவித்துள்ளார்.
ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போர் 2 வாரங்களை கடந்து தீவிரமடைந்து வருகிறது. உலகின் எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இரு தரப்பும் தாக்குதல்களை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி திடீரென அறிவித்துள்ளார். பல்வேறு அமெரிக்க ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில் அவர் கூறியதாவது: "ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர எந்த முயற்சிக்கும் தயாராக உள்ளது. ஆனால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த காரணமும் இல்லை.
கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடந்தபோதே அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இப்போது மீண்டும் அதே நிலைதான். இது மிகக் கசப்பான அனுபவம். எனவே, அமெரிக்காவுடன் பேச்சு நடத்துவது எங்கள் அஜெண்டாவில் இல்லை" என்றார்.
இதையும் படிங்க: இந்த கொடூர செயலுக்கு நிச்சயம் வருத்தப்படுவீங்க!! போர்கப்பல் மீது தாக்குதல்!! அமெரிக்காவுக்கு ஈரான் வார்னிங்!!
மேலும், அண்டை நாடுகளில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை ஈரான் தாக்கவில்லை என்றும், சில தாக்குதல்களுக்கு பின்னால் இஸ்ரேல் இருக்கலாம் என்றும் கூறினார். இது குறித்து அண்டை நாடுகளுடன் இணைந்து கூட்டு விசாரணை நடத்த ஈரான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஈரானிய ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவிய இந்த வதந்திகளை மறுத்து, அவர் ஜெருசலேமில் உள்ள ஒரு காபி ஷாப்பில் காபி ஆர்டர் செய்து, உதவியாளருடன் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் "நான் காபிக்காக 'டெட்' (இறந்தது போல் ஆசைப்படுகிறேன்)" என்று கிண்டலடித்து, தன்னை உயிருடன் இருப்பதை நிரூபித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி, வதந்திகளை முற்றிலும் அழித்துள்ளது.
போர் தொடர்ந்து நீடிப்பதால் எண்ணெய் விலை உயர்வு, உலக பொருளாதார பாதிப்பு ஆகியவை அதிகரித்து வருகின்றன. ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தை மறுப்பு, போரை மேலும் நீட்டிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. சர்வதேச சமூகம் அமைதி முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதையும் படிங்க: அணுசக்தி ஒப்பந்தம்! பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம்! ஈரான் - அமெரிக்கா பேச்சு! சமரச தீர்வா? போரா?