ஈரான் உச்ச தலைவர் உயிரோடு தான் உள்ளார்!! ஆனால்! வான்வழி தாக்குதலில் பலத்த காயம் அடைந்தார் மொஜ்தபா!!
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் நிலை மற்றும் இருப்பிடம் குறித்த கேள்விகள் அதிகரித்து வரும் நிலையில், வான்வழி தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் நிலைமை குறித்து உலக அளவில் பெரும் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அவர் வான்வழித் தாக்குதலில் பலத்த காயமடைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் தொடங்கியதில், அந்நாட்டின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
அதன் பிறகு அவரது மகன் மொஜ்தபா கமேனி (56) கடந்த மாதம் 8ஆம் தேதி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வெளியாகி வருகின்றன. அதிலும் அவரது குரல் இடம்பெறவில்லை.
இதையும் படிங்க: ஈரானின் புதிய தலைவர் உயிரோட இருக்காரா? அதிபர் ட்ரம்ப் எழுப்பிய சந்தேகம்! ஈரான் பதில் கடிதம்!
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தரப்பில், மொஜ்தபா உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்ட நிலையில், அவரது நிலைமை மற்றும் இருப்பிடம் குறித்த சந்தேகங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஈரானைச் சேர்ந்த ஒரு தனியார் செய்தி நிறுவனம், மொஜ்தபா கமேனி வான்வழித் தாக்குதலில் பலத்த காயமடைந்ததாக விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தி நிறுவனத்துக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, தாக்குதலின்போது மொஜ்தபா கமேனியின் முகத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது முகம் சிதைந்துவிட்டதாகவும், ஒன்று அல்லது இரண்டு கால்களிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் விழிப்புடன் இருப்பதாகவும், முக்கிய முடிவுகளை எடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் ஈரான் தரப்பு கூறுகிறது.
ஈரான் அதிகாரிகள், மொஜ்தபா ஆடியோ கான்பரன்சிங் மூலம் உயர்மட்ட கூட்டங்களில் பங்கேற்று வருவதாகவும், நடைபெறும் போர் மற்றும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், அவரது காயங்கள் குறித்து ஈரான் அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த உறுதிப்படுத்தலும் செய்யவில்லை.
மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்த இந்தத் தகவல்கள் மத்திய கிழக்கு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. அவர் உயிருடன் இருக்கிறாரா, எந்த அளவுக்கு காயமடைந்துள்ளார், எங்கு இருக்கிறார் என்பது குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. உலக நாடுகள் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: மேற்காசிய போர்! முற்றுப்புள்ளி வைக்க இந்தியா உதவ வேண்டும்!! கோரிக்கை விடுத்த ஈரான்!