×
 

"போரில் தலையிடாதீங்க... மீறி தலையிட்டால்...” - ஐரோப்பிய நாடுகளுக்கு பறந்த எச்சரிக்கை... கொந்தளிப்பில் ஈரான்...!

ஈரானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் ஐரோப்பிய நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள், அடுத்த வாரம் ஈரானுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுமாறு சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் (IAEA) உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தீர்மானம், ஈரான் தனது அணுசக்தி தொடர்பான கடமைகளை மீறியதற்காக அதை ஐ.நா. பாதுகாப்பு சபையிடம் சுட்டிக்காட்டும் வகையில் அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஏற்ற பதிலடி என்ற நடைமுறை முடிவுக்கு வந்துவிட்டது. போரின் விதிகள் மாறிவிட்டன என ஈரான் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இஸ்ரேலை குறிவைக்கும் ஈரான்? ஆதரவு அமைப்புகளுடன் ரகசிய ஆலோசனை… வெளியான பரபரப்பு தகவல்!

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு முக்கியத் தளமாக விளங்கும் கார்க் தீவில், ஈரானின் எண்ணெய்க் கப்பல் ஒன்றை அமெரிக்கா ஏவுகணை மூலம் தாக்கியுள்ளது.

அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் ஒரு நாசகாரிக் கப்பல் ஆகியவற்றை ஈரான் படைகள் குறிவைத்ததால், இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஏற்ற பதிலடி என்ற நடைமுறை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், போரின் விதிகள் மாறிவிட்டதாகவும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஈரானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் ஐரோப்பிய நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி முழுவதும் அமெரிக்கா கட்டுப்பாட்டில் உள்ளது! டிரம்பின் அதிரடி அறிவிப்பால் ஈரானுக்கு புதிய நெருக்கடி?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share