×
 

அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது! ஈரான் கடும் எச்சரிக்கை!

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை ஹார்முஸ் ஜலசந்தி எங்களது கட்டுப்பாட்டில் உள்ளது; அமெரிக்கா மத்திய கிழக்கு நாட்டைத் தொடர்ந்து அச்சுறுத்தும் வரை அந்த முக்கிய ஜலசந்தியை மீண்டும் திறக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழி வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடரும் வரை அந்த வழித்தடத்தை மீண்டும் திறக்க முடியாது என்றும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கடுமையாக எச்சரித்துள்ளது.

மேற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் பல மாதங்களாக நீடித்து வருகிறது. போர் நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இரு தரப்பிலும் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்தச் சூழலில், உலகளவில் கடல்வழியாக கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெயில் சுமார் 20 சதவீதம் கடந்து செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியின் நிலைமை உலக நாடுகளின் கவலையை அதிகரித்துள்ளது.

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல அனுமதிப்பது தொடர்பான முடிவு முழுமையாக ஈரானின் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகள் தங்களது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கொந்தளிக்கப் போகும் காஸ்பியன் கடல்... ஈரானை அழிக்க அமெரிக்காவின் நரித்தனம்... டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்திப்பின் பகீர் பின்னணி...!

அறிக்கையில், ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையுடன் தொடர்புடைய பகுதி என்றும், வெளிநாட்டு தலையீட்டை ஏற்க முடியாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் அச்சுறுத்தல்கள், கடல்வழிப் போக்குவரத்தில் தலையீடு மற்றும் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் வரை அந்த வழித்தடத்தை மீண்டும் திறப்பது சாத்தியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு உலக எண்ணெய் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே மத்திய கிழக்கில் இருந்து பெருமளவு கச்சா எண்ணெய் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், அந்த வழித்தடத்தில் ஏற்படும் எந்தவொரு தடையும் சர்வதேச எரிசக்தி சந்தை, கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய் விலைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க: ஈரானுக்கு உதவுகிறதா ரஷ்யா? புடினிடம் நேரடியாக கேட்பேன்! ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டுக்கு டிரம்ப் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share