×
 

ஈரானுக்கு உதவுகிறதா ரஷ்யா? புடினிடம் நேரடியாக கேட்பேன்! ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டுக்கு டிரம்ப் அதிரடி!

ஈரானுக்கு ரஷ்யா உதவுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறிய குற்றச்சாட்டு குறித்து அதிபர் புடினிடம் கேட்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு ரஷ்யா ராணுவ உதவி வழங்குவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் நேரடியாகக் கேட்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், முதலில் அந்த மாநிலத்திற்கு மீண்டும் வந்திருப்பதில் மகிழ்ச்சி இருப்பதாக தெரிவித்தார். பின்னர், ரஷ்யா - ஈரான் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "ஈரானுக்கு ரஷ்யா உதவுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறிய குற்றச்சாட்டு குறித்து அதிபர் புடினிடம் கேட்பேன்" என்றார்.

அதனைத் தொடர்ந்து, "அமெரிக்கா ஈரானை படுமோசமாக தாக்கி உள்ளது. ரஷ்யாவின் உதவி ஏதேனும் இருந்த போதிலும் அந்த ஈரான் அரசு தோல்வி அடைந்து வருகிறது. ரஷ்யாவின் உதவியால் பெரிய தாக்கம் எதுவும் ஏற்படவில்லை. ஏனென்றால் நாங்கள் ஈரானை சின்னாபின்னமாக்கிவிட்டோம்" என்றும் டிரம்ப் கூறினார்.

இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் போர் புதிய திருப்பம்... தாக்குதலை நிறுத்திய டிரம்ப்! ஆயுதப் பற்றாக்குறையா?!

மேலும் அவர், "ஈரானிடம் விமானப்படை, கடற்படை எதுவுமே இல்லை. ரஷ்யா வெனிசுலாவுக்கு ஏராளமான உபகரணங்களை கொடுத்தது. அனைத்துமே ரஷ்ய உபகரணங்கள் தான் இருந்தன. அது எப்படி செயல்பட்டது? அவ்வளவு சிறப்பாக இல்லை" என்றும் கருத்து தெரிவித்தார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன்வைத்த குற்றச்சாட்டு மற்றும் அதற்கு டிரம்ப் அளித்த பதில் காரணமாக, ரஷ்யா - ஈரான் உறவு மீண்டும் சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக, ரஷ்யா உண்மையில் ஈரானுக்கு எந்த வகையான உதவியை வழங்குகிறது என்பது குறித்த விவாதம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இதுவரை, ஜெலன்ஸ்கியின் குற்றச்சாட்டு குறித்து ரஷ்ய அரசு அதிகாரப்பூர்வ பதில் அளிக்கவில்லை. அதேபோல், டிரம்ப் குறிப்பிட்டபடி புடினுடன் இந்த விவகாரம் குறித்து எப்போது பேசுவார் என்பதற்கான தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் அமெரிக்கா, ரஷ்யா, ஈரான் மற்றும் உக்ரைன் இடையேயான அரசியல் உறவுகளில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இனிமேல் கப்பல்களுக்கு சேதம் ஏற்பட்டால் ஈரான் பணத்தில் இருந்து இழப்பீடு... டிரம்பின் அதிரடி அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share