×
 

அமெரிக்கா பாதுகாப்பாக இருக்க விரும்பினால்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்!! மீண்டும் வார்னிங்!

பாரசீக வளைகுடா பிராந்தியத்தை விட்டு அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா பாரசீக வளைகுடா பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது இந்த அறிக்கை சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு மீண்டும் மோசமடையும் சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஈரானின் உறுதியையும் ராணுவ திறனையும் யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பாரசீக வளைகுடா பகுதியில் தலையீடு செய்த வெளிநாட்டு சக்திகள் கடுமையான விளைவுகளை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கடும் கோபத்தில் கண்கள் சிவந்த டிரம்ப்... நள்ளிரவில் ஈரானை பதம் பார்த்த அமெரிக்கா... நடந்தது என்ன?

மேலும், அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தல் விடுப்பதோ அல்லது தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ நடந்தால், அதற்கு ஈரானின் ஆயுதப்படைகள் தகுந்த பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். ஈரானின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா தனது பாதுகாப்பை உறுதி செய்ய விரும்பினால், பாரசீக வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தனது ராணுவ நடவடிக்கைகளை குறைத்து வெளியேற வேண்டும் என்றும் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இந்த கருத்து சர்வதேச அளவில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

மேற்காசிய பிராந்தியம் உலகின் முக்கிய எண்ணெய் உற்பத்தி மற்றும் கடல் வர்த்தக மையமாக இருப்பதால், அங்கு ஏற்படும் எந்தவொரு மோதலும் உலக பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், தற்போதைய பதற்ற நிலைமை எவ்வாறு மாறும் என்பது குறித்து உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

ஈரான் வெளியுறவு அமைச்சரின் இந்த எச்சரிக்கை, அடுத்தகட்ட அரசியல் மற்றும் ராணுவ நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: உச்சக்கட்ட போர் பதற்றத்திற்கு நடுவே திடீர் திருப்பம்... அதிரடி முடிவை உலக நாடுகளுக்கு அறிவித்த ஈரான்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share