இது ட்ரெயிலர் தான்! மெயின் பிக்சர் இனிமேல் தான்!! சினிமா டயலாக் சொல்லி அமெரிக்காவுக்கு ஈரான் வார்னிங்!
போர் பதற்றம் தணியாத நிலையில், மேற்காசிய நாடான ஈரான் ஒரு வித்தியாசமான மற்றும் ஆக்ரோஷமான எச்சரிக்கையை அமெரிக்காவுக்கு விடுத்துள்ளது.
போர் பதற்றம் தொடரும் நிலையில், மேற்காசிய நாடான ஈரான் அமெரிக்காவுக்கு வித்தியாசமான ஆக்ரோஷமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தியாவின் மும்பையில் உள்ள ஈரான் தூதரகம், சமூக வலைதளத்தில் ஒரு காணொளியைப் பகிர்ந்து, பாலிவுட் பட வசனத்தை மேற்கோள் காட்டி அமெரிக்காவை நோக்கி சவால் விட்டுள்ளது.
பாரசீக வளைகுடாவில் (பெர்ஷியன் கல்ஃப்) தனது கடற்படையின் அதிவேக ஏவுகணை படகுகளின் (ஃபாஸ்ட் அட்டாக் மிசைல் போட்ஸ்) திறன்களை வெளிப்படுத்தும் வீடியோவை ஈரான் தூதரகம் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவில், ஈரானிய கடற்படையின் “ரெட் பீஸ்” (சிவப்பு தேனீக்கள்) என்று அழைக்கப்படும் வேகமான ஏவுகணை படகுகள், உயர் வேகத்தில் சென்று துல்லியமாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பதிவில், புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தின் பிரபல வசனத்தை ஈரான் தூதரகம் பயன்படுத்தியுள்ளது. “இதுவரை நடந்தது வெறும் டிரைலர் மட்டும்தான்... படம் இன்னும் பாக்கி இருக்கிறது” (Abhi toh sirf trailer hai, picture abhi baaki hai) என்ற வசனத்தை மேற்கோள் காட்டி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் கடற்படை “முடிந்துவிட்டது” என்று கூறியதை கிண்டல் செய்துள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு இரவில் போன் போட்ட ட்ரம்ப்!! 40 நிமிடங்கள் நீடித்த பேச்சு!! மேற்காசிய போர் பதற்றம் எதிரொலி!
“அமெரிக்கா எவ்வளவு சொன்னாலும், இது வெறும் டிரைலர் மட்டுமே... முழுப் படம் இன்னும் வரவில்லை. எங்கள் ஏவுகணை படகுகள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன” என்று எச்சரித்த ஈரான், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்காவின் எந்த நடவடிக்கையையும் தீவிரமாக எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதாகக் காட்டியுள்ளது.
ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி தடை குறித்த விவாதங்கள் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், மும்பை ஈரான் தூதரகத்தின் இந்த பாலிவுட் ஸ்டைல் எச்சரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்துக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் கடற்படை வலிமையை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பதிவு அமைந்துள்ளது.
இந்த எச்சரிக்கை, தற்போதைய மேற்காசிய சூழலில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஈரான் தனது கடற்படை திறன்களை வெளிப்படுத்தும் இந்த வீடியோ, அமெரிக்காவுக்கு வலுவான செய்தியை அனுப்புவதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எங்க கண்ணிவெடி வச்சோம்னு தெரிலையே!! ஹார்முஸ் ஜலசந்தி திறப்பில் சிக்கல்! கையை பிசையும் ஈரான்!