×
 

கமேனி மகன்னா விட்ருவோமா? யாரா இருந்தாலும் அழிப்போம்! ஈரானுக்கு இஸ்ரேல் பகீரங்க மிரட்டல்!

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெஹ்ரான்/யெருசலேம்: ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பின்னர், அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராகவும் மதகுருவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். 

"ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு தலைவரும் – யாராக இருந்தாலும் – அழிக்கப்படுவார்" என அவர் அறிவித்துள்ளது மேற்காசியாவில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் காட்ஸ் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: "இஸ்ரேலை அழிக்கவோ, அமெரிக்காவையோ, உலகத்தையோ, பிராந்திய நாடுகளையோ அச்சுறுத்தவோ முடியாது. ஈரான் மக்களை அடக்கி, அவர்களின் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்பட்ட எந்த தலைவரும் இனி இலக்காக இருப்பார். அவர்கள் ஒழிக்கப்படுவார்கள்."

இதையும் படிங்க: ஈரான் புதிய ஆட்சியாளராக கமேனியின் மகன் தேர்வு! உச்ச தலைவராகிறார் மொஜ்தபா!!

இஸ்ரேல் காட்ஸ் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: "இஸ்ரேலை அழிக்கவோ, அமெரிக்காவையோ, உலகத்தையோ, பிராந்திய நாடுகளையோ அச்சுறுத்தவோ முடியாது. ஈரான் மக்களை அடக்கி, அவர்களின் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்பட்ட எந்த தலைவரும் இனி இலக்காக இருப்பார். அவர்கள் ஒழிக்கப்படுவார்கள்."

இஸ்ரேலின் இந்த கடுமையான நிலைப்பாடு ஈரான் மீதான தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் சமிக்ஞையாக உள்ளது. ஈரான் ஏற்கனவே இஸ்ரேல், அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா, ஹவுதி போன்ற ஈரான் ஆதரவு குழுக்களும் தாக்குதல்களை அதிகரித்துள்ளன. இந்நிலையில் இஸ்ரேலின் எச்சரிக்கை, போரை மேலும் விரிவடையச் செய்யும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

ஈரான் உள்நாட்டில் மொஜ்தபா கமேனியின் நியமனத்திற்கு சில எதிர்ப்புகள் எழுந்துள்ளன. குடும்ப ஆட்சி போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் உள்ளன. இஸ்ரேலின் எச்சரிக்கை ஈரான் மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக காட்ஸ் கூறியுள்ளது. ஆனால் இது ஈரானை மேலும் தூண்டிவிடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். போர் நீடித்தால் உலக பொருளாதாரம், எண்ணெய் விலை உயர்வு போன்றவை பெரிதும் பாதிக்கப்படும் அச்சம் நீடிக்கிறது.

இதையும் படிங்க: 2 நாளில் 8 நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை!! இராஜதந்திர முயற்சி!! இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மோடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share