×
 

சாரே! கொல மாஸு! இறங்கி அடிக்கும் இந்தியா.. பயத்தில் பாக்., அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை தெறிக்கவிட்ட ஜெய்சங்கர்..!

இந்தியா - பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நடந்த சண்டை, காஷ்மீர் பிரச்னை அல்ல. அது பயங்கரவாத தாக்குதலில் எதிரொலி. 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

அரசு முறை பயணமாக ஐரோப்பா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், குளோபல் சவுத் நாடுகளின் மிகப் பெரிய அச்சுறுத்தல்களில் பயங்கரவாதம் முதன்மையானதாக இருப்பதாக கூறினார். இது குறித்து, அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்காவில் உள்ள நாடுகள், ஓசியானா எனப்படும் ஆஸ்திரேலியா, பிஜி, நியூசிலாந்து, பப்புவா நியூகினியா உள்ளிட்ட நாடுகளை குளோபல் சவுத் நாடுகள் பல்வேறு அச்சுறுத்தல்களை சந்திக்கின்றன.

அவற்றில் பருவநிலை மாற்றம், வறுமை, நீண்ட கால கோவிட் தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இவை அனைத்தையும் விட பயங்கரவாதம் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. இந்தியா - பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நடந்த சண்டை, காஷ்மீர் பிரச்னை அல்ல. அது பயங்கரவாத தாக்குதலில் எதிரொலி. 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. 

இதையும் படிங்க: ரஷ்யாவில் தரமான சம்பவம்.. பாக்., முகத்திரையை டார் டாராக கிழித்த கனிமொழி..!

எங்கள் எல்லையில் நடக்கும் தொடர் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டு வர நாங்களே முயற்சிக்கிறோம் என்பது தான் எங்கள் நிலைப்பாடாக உள்ளது. இதில் மூன்றாவது நபர் தலையீட்டை நாங்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.செல்வம் கொழிக்கும் ஐரோப்பிய நாடுகள், கச்சா எண்ணெய் வாங்குவதற்காக மத்திய கிழக்கு நாடுகளின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளன. ஏனென்றால், அவர்களுக்கு ரஷ்யாவுடன் ஒத்துப்போக முடியாது. என்ன விலை கொடுத்தும் கச்சா எண்ணெய் வாங்க முடிவெடுத்த ஐரோப்பிய நாடுகளால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இது எங்களைப் போன்ற பலருக்கு பெரும் பிரச்னையாக அமைந்தது. 

இதனால் மத்திய கிழக்கு நாடுகளும், ஐரோப்பிய நாடுகளுக்கே கச்சா எண்ணெய் விற்பதில் அதிக கவனம் செலுத்தியது. இதனால் பிற நாடுகளின் நிலை என்ன ஆகும் என்பது பற்றி யோசிக்கவில்லை. எங்களுக்கு எரிசக்தியும் அதற்கான எரிபொருளும் வாழ்வா, சாவா பிரச்னை. அதனால், எங்கள் எரிபொருள் தேவையை நாங்களே பூர்த்தி செய்யவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவானது.

அதே நேரம் 2008ல் ஏற்பட்ட உலக பொருளாதார மந்த நிலையை மேற்கத்திய நாடுகள் தனியாக சமாளிக்க முடியவில்லை. அதனால் தான், ஜி7, ஜி8 என்ற கூட்டமைப்பு ஜி20 ஆக மாறியது. அந்த கூட்டமைப்பில் இடம் பெற்ற நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்ட போது, 50 நாடுகள் அதில் உறுப்பினராக இருந்தன. தற்போது அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 200ஐ எட்ட உள்ளது. அது எப்படி நிகழ்ந்தது.

ஐநாவில் இடம் பெற்றுள்ள பல நாடுகள் தங்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என உணர்கின்றன. அந்த அமைப்பு ஒருதலைப்பட்சமான முடிவெடுக்கும் நிலையில் இருப்பதாக உணர்கின்றன. அப்படி உணர்கையில் உலக நாடுகள் வேறு ஒரு புதிய அமைப்பை நோக்கி ஓடுகின்றன. அரசியல் என்பது தண்ணீரை போன்றது. அது சமநிலையை தேடி ஒடக்கூடியது. உலகம் வேறு ஒரு பாதையில் செல்கிறது. மேற்கத்திய நிலைப்பாட்டில் இருந்து விலகி, பன்முகத்தன்மையை தன்னகப்படுத்தி வருகிறது. குறிப்பாக ஆசிய நாடுகளின் தாக்கம் அதிகம் உள்ளது என ஜெய்சங்கர் கூறினார்.

இதையும் படிங்க: ராகுல்காந்தி பொறுப்பின்றி செய்த செயல்.. பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் வலுக்கும் கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share