×
 

நல்லதுக்கு இல்லை.. சுத்த பைத்தியக்காரத்தனம்! எலான் மஸ்கை எச்சரிக்கும் அமெரிக்க துணை அதிபர்..

எலான் மஸ்கின் செயல், நாட்டிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அது அவருக்கும் நல்லது அல்ல என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் களம் இறங்கிய டிரம்ப் வெற்றி பெற்று 2வது முறை அதிபர் ஆனார். இந்த தேர்தலில் டிரம்புக்கு பெரிய அளவில் உதவியவர் அமெரிக்காவை சேர்ந்த உலக பணக்காரர் எலான் மஸ்க். டிரம்ப் கட்சிக்கு நன்கொடையாக பல ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்தார்.

டிரம்புக்காக நேரடியாக களம் இறங்கி தீவிரமாக பிரசாரமும் செய்தார். அதிபர் ஆனதும் நன்றி கடனாக DOGE எனப்படும் செயல்திறன் மேம்பாட்டு துறை என்ற சிறப்பு துறையை உருவாக்கி, அதன் தலைவராக மஸ்கை நியமனம் செய்து அழகு பார்த்தார் டிரம்ப்.

அரசுக்கும் டிரம்புக்கும் நிர்வாக ரீதியில் ஆலோசனை கொடுப்பது தான் இந்த துறைக்கான வேலை. நிதி சுமையை குறைக்க பல விஷயங்களை மஸ்க் செய்தார். டிரம்பும் மஸ்க் பரிந்துரையை ஏற்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வந்தார். எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த நேரத்தில், இரு நண்பர்கள் இடையேவும் இப்போது மிகப்பெரிய மோதல் வெடித்து இருக்கிறது. ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசுகின்றனர். 

இதையும் படிங்க: விளைவுகள் கடுமையாக இருக்கும்..! தனிக்கட்சி துவங்கும் எலான் மஸ்கை எச்சரிக்கும் ட்ரம்ப்..!

இதன் உச்சமாக, 36 குழந்தைகளை சீரழித்த உலகின் மோசமான காமுகன் ஒருவனுடன் டிரம்புக்கு தொடர்பு இருப்பதாக மஸ்க் கூறி இருப்பது உலகத்தையே திடுக்கிட வைத்துள்ளது. அதே போல் டிரம்ப் பதவி விலக வேண்டும் என்றும் மஸ்க் வலியுறுத்தி உள்ளார். டிரம்பை பதவி நீக்கம் செய்து விட்டு ஜேடி வான்சை புதிய அதிபராக அறிவிக்க வேண்டும் என்று ஒருவர் ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில் இதற்கு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பதிலளித்துள்ளார்.

எலான் மஸ்க் கொஞ்சம் அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என நான் நினைக்கிறேன். அதிபர் டிரம்ப் குறித்து எலான் மஸ்க் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகள் பெரிய தவறு. அவர் உணர்ச்சிவசப்படுகிறார். அவர் தனது அமைதியை இழந்துவிட்டார். ஒரு காலத்தில் நெருங்கிய கூட்டாளிகள்.

தற்போது எலான் மஸ்கின் செயல், நாட்டிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அது அவருக்கும் நல்லது அல்ல என்று நான் நினைக்கிறேன். எலான் மஸ்க் மீண்டும் டிரம்புடன் கூட்டணிக்கு வருவார் என்று நம்புகிறேன்.

எலான் மஸ்க் எதிர்க்கும் மசோதா செலவினங்களைக் குறைப்பது மட்டுமல்ல. இது ஒரு நல்ல மசோதா ஆகும். ஆயிரக்கணக்கான வேலை இழப்புகளுக்கு வழிவகுத்த போதிலும், செலவுகளைக் குறைத்த எலான் மஸ்க் செயல் பாராட்டுக்குரியது. அவர் ஒரு சிறந்த தொழில்முனைவோராக திகழ்ந்தார். டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எலான் மஸ்க் கூறியது முற்றிலும் பைத்தியக் காரத்தனமானது. அதிபர் டிரம்ப் ஒரு நல்ல வேலையைச் செய்கிறார். இவ்வாறு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறினார்.

இதையும் படிங்க: சசிதரூர் மேஜிக் சக்சஸ்.. பயங்கரவாதத்தை வேரறுக்க துணைநிற்போம்.. இந்தியாவுக்கு அமெரிக்கா சப்போர்ட்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share