×
 

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... காஞ்சிபுரம் டு சென்னை சாலையில் திடீர் மாற்றம்...!

வாகன ஓட்டிகள் சீரான போக்குவரத்திற்காக, OMR மற்றும் ECR சாலைகளைப் பயன்படுத்தி, தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒத்துழைக்குமாறு

காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் - முடிச்சூர் சாலை மற்றும் வெளிச்சுற்றுச்சாலை (Outer ring road) சந்திப்பிலிருந்து வெளிச்சுற்றுச்சாலை வழியாக செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தாம்பரத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் -தாம்பரம் fly over (Southern Side) பழைய சோதனைச்சாவடி வாயில் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பு, தாம்பரம் fly over-மேல் பகுதியிலிருந்து மேடவாக்கம் மார்க்கமாக வேளச்சேரி நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கனரக மதுரவாயலிலிருந்து சென்னை நோக்கிவரும் வாகனங்கள் -மதுரவாயல் பைப்பாஸ் ஆம்புலன்ஸ் பாயிண்ட் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பை தொடர்ந்து, இரும்புலியூர் சந்திப்பில் இருந்து பெருங்களத்தூர் நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திடீரென பற்றி எரிந்த கார்; 6 மாணவ, மாணவிகளின் நிலை என்ன?

கனரக * செங்கல்பட்டிலிருந்து சென்னை நோக்கிவரும் வாகனங்கள் சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கியும், வண்டலூர் வெளிச்சுற்றுச்சாலை (Outer ring Road) வழியாக படப்பை நோக்கியும், வண்டலூர் பழைய பாலம் வழியாக வாலஜாபாத் சாலை நோக்கியும் செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, வாகன ஓட்டிகள் சீரான போக்குவரத்திற்காக, OMR மற்றும் ECR சாலைகளைப் பயன்படுத்தி, தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இதையும் படிங்க: நேரில் ஆஜரான அன்புமணி... காணொலியில் ராமதாஸ் - நீதிபதி முன்பு நடந்தது என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share