×
 

இந்தியாவுக்கு எதிராக குழந்தைகளை கேடயமாக்கி... பாக்-ன் கேவலம்..! அம்பலப்படுத்திய கவாஜா..!

மதரஸா குழந்தையைத் தவிர, கவாஜா ஆசிப் ட்ரோன் வெடிப்பு குறித்தும் உண்மைக்கு புறம்பான சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

பாகிஸ்தானிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்த இந்தியா எஸ்-400 பாதுகாப்பு கேடயத்தைப் பயன்படுத்துகிறது. ஆனால், பாகிஸ்தான் தனது பாதுகாப்பிற்காக மதரஸா குழந்தைகளை கேடயமாக்குகிறது. இந்த தகவலை பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பே வெளியிட்டுள்ளதுதான் அதிர்ச்சி.

 

 பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ''மதரஸா குழந்தைகள் நமது பாதுகாப்பிற்கு உதவியாக வருகிறார்கள்.  இந்தியாவின் தாக்குதலின் போது அவர்கள் தற்காப்புக்கும் உதவியாக உள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார். இந்த குழந்தைகள் இஸ்லாமிய மதப் பணிகளை ஊக்குவிக்கின்றனர். ஆசிப்பின் இந்த பேச்சால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

தாக்குதலின் கீழ் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத மறைவிடங்களை இந்தியா அழித்துவிட்டது. இந்த மறைவிடங்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகு, பாகிஸ்தான் மதரஸா குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் அனுதாபத்தை தேடி வந்தது.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் தீவிரவாதம் உண்மை... என் தாயையே கொன்று விட்டனர்... உண்மையை கக்கிய பிலாவல்..!

மதரஸா குழந்தையைத் தவிர, கவாஜா ஆசிப் ட்ரோன் வெடிப்பு குறித்தும் உண்மைக்கு புறம்பான சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். ''எங்கள் பகுதியில் சில ட்ரோன்கள் காணப்பட்டன. இந்த ட்ரோன்களை நாங்கள் சுட்டு வீழ்த்தியிருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அவற்றை விடுவித்தனர்.

இந்த ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தால், இந்தியா எங்களைக் கண்டுபிடித்து இருக்கும். இது பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும். ட்ரோன் வெடிப்பால் பாகிஸ்தானுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. துருக்கி, சீனா போன்ற நாடுகள் வெளிப்படையாக எங்களுடன் நிற்கின்றன. இதுவரை, எங்கள் ராணுவ தளம் தாக்கப்படவில்லை. இந்தியா சில இடங்களைத் தாக்கியது. ஆனால் அதிலிருந்து எங்களுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து முதலில் ஒப்புக்கொண்டவர் கவாஜா ஆசிப் தான். ''பிரிட்டன், அமெரிக்காவின் கட்டளைப்படி பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்தது. இன்றுவரை இதன் விளைவுகளை பாகிஸ்தான் அனுபவித்து வருகிறது. இந்தியா தாக்குதல் நடத்தாவிட்டால், நாங்கள் அமைதியாக அமர்ந்திருப்போம்'' என்றும் ஆசிஃப் கூறி இருந்தார்.

இதையும் படிங்க: கெத்துக் காட்டினீயே ராஜா... கம்பீரம் என்னாச்சு கவாஜா..? இந்தியாவிடம் உல்டாவாக மாறிய பாக்., அமைச்சர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share