லஷ்கர் தீவிரவாதிக்கு குண்டடி பட்டதா? ஐஎஸ்ஐ பாதுகாப்புடன் பாக்.-ல் தீவிர சிகிச்சை..!
லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவனான அமீர் ஹம்சா, குண்டு காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் விவரம் வெளியாகி உள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது.
இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் தரப்பு ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது. ஆனால், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. பதிலடியாக பாகிஸ்தான் விமானதளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துல்லிய ஏவுகணைத் தாக்குதலையும் இந்தியா நடத்தியது. உச்சகட்ட பதற்றத்துக்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: காங்கிரஸில் அவமானப்படுத்த முயற்சியா? பிரதமர் மோடி கொடுத்த வாய்ப்பால் சிக்கலில் சசிதரூர்..!
எனினும் இன்னமும் ஆப்ரேஷன் சிந்தூர் முடிவடைய வில்லை. பயங்கரவாதத்தை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2 நாட்களுக்கு முன்னர், இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ரசவுல்லா நிஜமானி என்ற அபு சயியுல்லா என்பவன் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்த நிலையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவனான அமீர் ஹம்சா, குண்டு காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் விவரம் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கரே தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவனான அமீர் ஹம்சா உடலில் காயங்களுடன் லாகூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளான். பாகிஸ்தான் ராணுவ உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் எப்படி நடந்தது; காயத்தின் தீவிரம் பற்றி எந்த தகவலையும் பயங்கரவாதிகள் வெளியிடவில்லை.
அமீர் ஹம்சா உடலில் குண்டு காயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், லாகூர் வீட்டில் ஏற்பட்ட விபத்தில் ஹம்சா காயம் அடைந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. லஷ்கரே தொய்பா இயக்கத்தை நிறுவிய 17 பேரில் அமீர் ஹம்சாவும் ஒருவன். அதன் தலைவர் ஹபீஸ் முகமது சயீத், துணைத்தலைவர் அப்துல் ரஹ்மான் மக்கி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவன். பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் மூளையாக செயல்பட்டவன். லஷ்கர் இயக்கத்தின் நிதி வசூல், இதழ்கள் வெளியீடு, பிரசாரங்களை வடிவமைக்கும் பொறுப்புகளை ஹம்சா கவனிக்கிறான். லஷ்கரே தொய்பா இயக்கத்தை தடை செய்துள்ள அமெரிக்கா அமீர் ஹம்சாவை தேடப்படும் பயங்கரவாதி என்ற பட்டியலில் வைத்துள்ளது.
இதையும் படிங்க: நயினாரை சந்தித்து என்ன பேசுனீங்க? திருப்பூரில் 2 காவலர்கள் ஆயுத படைக்கு மாற்றப்பட்டதன் காரணம்..!