×
 

வெனிசுலாவை தாக்க போதைப்பொருள் காரணமில்லை! அமெரிக்காவின் சீக்ரெட் ப்ளான்!! கொட்டிக்கிடக்கும் வளம்!

'அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு போதைப்பொருள் கடத்தல் முக்கிய காரணமில்லை. தங்கள் நாட்டில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான எண்ணெய் வளங்களை குறிவைத்தே அமெரிக்கா ஆக்கிரமிப்பில் இறங்கியுள்ளது' என, வெனிசுலா அதிபர் மதுரோவின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்தது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்காக மட்டும் அல்ல என்று அவரது ஆதரவாளர்கள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர். அமெரிக்காவின் உண்மையான நோக்கம் வெனிசுலாவின் உலகிலேயே மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்புகளை கைப்பற்றுவதுதான் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தென் அமெரிக்க நாடான வெனிசுலா உலகிலேயே அதிக நிரூபிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இருப்புகளை கொண்ட நாடு ஆகும். சமீபத்திய தகவல்களின்படி சுமார் 303 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருப்பு உள்ளது. இது சவுதி அரேபியாவின் 267 பில்லியன் பீப்பாய்களை விட அதிகம். 

உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் வெனிசுலா மட்டும் பெரும் பங்கு வகிக்கிறது. ஈரான், கனடா போன்ற நாடுகளைத் தொடர்ந்து இந்த நான்கு நாடுகளே உலக எண்ணெய் இருப்பில் பாதிக்கு மேல் கொண்டுள்ளன. அமெரிக்கா இதில் ஒன்பதாவது இடத்தில் மட்டுமே உள்ளது.

இதையும் படிங்க: வெனிசுலாவில் அமெரிக்கா ஆடிய கோர தாண்டவம்! கியூபாவை சேர்ந்த 32 பேர் பரிதாப மரணம்!

ஆனால் வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி வருவாய் மிகக் குறைவாகவே உள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக அந்நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் நவீனமயமாக்கப்படாமல் உள்ளன. இதனால் ஏராளமான எண்ணெய் இருப்பு இருந்தும் அதை முழுமையாகப் பயன்படுத்தி வருவாய் ஈட்ட முடியவில்லை. 

கச்சா எண்ணெயில் இலகு ரகமும் கன ரகமும் உள்ளன. அமெரிக்காவின் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு கன ரக எண்ணெய் தேவைப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் அதிகம் கிடைப்பது இலகு ரகம். வெனிசுலாவில் கன ரக எண்ணெய் ஏராளமாக உள்ளது. இது அமெரிக்காவுக்கு மிகவும் உகந்தது.

மதுரோவை கைது செய்த பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிய போது போதைப்பொருள் பற்றி சுருக்கமாகக் கூறிவிட்டு எண்ணெய் வளம் பற்றி விரிவாக பேசினார். வெனிசுலாவின் எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் தோல்வியடைந்துள்ளதாகவும் அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களை அங்கு அனுப்பி உள்கட்டமைப்பை சரிசெய்து ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் அந்நாடு வளமடையும் என்று கூறினார்.

இந்தக் கருத்துகளை சுட்டிக்காட்டி மதுரோ ஆதரவாளர்கள் அமெரிக்காவின் உண்மையான இலக்கு போதைப்பொருள் அல்ல என்றும் வெனிசுலாவின் கன ரக கச்சா எண்ணெய் வளமே என்றும் குற்றம் சாட்டுகின்றனர். அமெரிக்கா தற்போது வெனிசுலாவை நிர்வகிக்கும் என்று டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் உலக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: வெனிசுலா அதிபர் கைது விவகாரம்!! இன்று கூடுகிறது ஐநா பாதுகாப்பு கவுன்சில்! அதிகரிக்கும் பதற்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share