பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்... மகளிர் உரிமை தொகை..! வரவு வைக்கும் பணி தீவிரம்...!
கூடுதலாக விண்ணப்பித்த மகளிருக்கு உரிமை தொகை வரவு வைக்கும் பணி தொடங்கியது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாடு அரசால் 2023 செப்டம்பர் 15 ஆம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று, காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பெயரிடப்பட்டு, பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக உரிமைகளை உறுதி செய்யும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டது. மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை பெறுவதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மேலும் பலர் விண்ணப்பித்துள்ளனர். புதிதாக விண்ணப்பித்த தேர்வானவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலினே மீண்டும் முதலமைச்சர்... வரும் 14ல் மாபெரும் திமுக கூட்டம்... உதயநிதி அறிவிப்பு...!
புதிதாக விண்ணப்பித்த மகளிருக்கு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்தார். 28 லட்சம் பெண்கள் உரிமை தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர் என்றும் மாதந்தோறும் 1.14 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது எனவும் ஒவ்வொரு மகளிருக்கும் 26,000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இந்த நிலையில், இன்னும் 3 நாட்களில் புதிதாக விண்ணப்பித்த மகளிர் 17 ஆயிரம் பேருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதனிடையே, மகளிர் வங்கிக் கணக்குகளில் 1000 ரூபாய் வரவு வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: பி. ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை... அரசு செய்தால் சட்டம்... சாமானியன் செய்தால் குற்றமா? சீமான் கொந்தளிப்பு...!