×
 

தமிழ்நாடு என்றாலே சாதனை தான்..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

தமிழ்நாடு என்றாலே சாதனைதான் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

தமிழ்நாடு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்பது மாநிலத்தின் சமீபத்திய பொருளாதார செயல்திறனைப் பிரதிபலிக்கும் முக்கியமான நிகழ்வு. 2024-25 நிதியாண்டில் மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்டச் செயல்பாட்டு அமைச்சகத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, தமிழ்நாட்டின் உண்மையான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 11.19 சதவீதமாக இருந்தது. இது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலம் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய முதல் முறையாகும். முந்தைய 2010-11 நிதியாண்டில் 13.12 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த வளர்ச்சி முதலில் நிதிநிலை அறிக்கையில் 9.69 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட தரவுகளில் கணிசமாக உயர்ந்து 11.19 சதவீதமாக மாறியது. இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு மிக உயர்ந்த வளர்ச்சியைப் பெற்ற ஒரே மாநிலமாகத் திகழ்ந்தது. மாநிலத்தின் பெயரளவு GSDP 2024-25ல் ரூ.31.19 லட்சம் கோடியை எட்டியது, இது சுமார் 16 சதவீத பெயரளவு வளர்ச்சியைக் காட்டுகிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. 

2025-26 நிதியாண்டிலும் இந்தப் போக்கு தொடர்ந்தது. மத்திய அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, தமிழ்நாடு 10.83 சதவீத உண்மையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு என்றாலே சாதனை தான் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 2 ஆண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி..! இதுதான் திராவிட மாடல்..! TRB ராஜா பெருமிதம்..!

திராவிட மாடல் தனித்துவமான மாடல் என்றும் சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தார். முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என கூறினார். இது தொடக்கம்தான். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி. நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல., தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும் என்று கூறியுள்ளார். 

இதையும் படிங்க: சென்னை கோட்டை திமுகவுக்கு தான்..! கி.வீரமணி திட்டவட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share