×
 

தந்தை பெரியார் இல்லைனா... ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆரவாரப் பேச்சு...!

தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழ் நாட்டுக்கு இவ்வளவு வளர்ச்சி வந்திருக்காது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் 605 கோடி ரூபாயில் முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்ததுடன் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, ஜவுளி, மஞ்சள், கைத்தறி ஆகியவற்றுக்கு புகழ்பெற்ற நகரம் ஈரோடு என்று கூறினார். தந்தை பெரியாரை தந்த ஈரோட்டிற்கு வந்ததில் திராவிட இயக்கத்தின் முதல் தொண்டனாக பெருமைப்படுகிறேன் என்றும் தந்தை பெரியார் இல்லை என்றால் திராவிட இயக்கங்கள் இல்லை என்று கூறினார். தந்தை பெரியார் இல்லையென்றால் தமிழ்நாடு இந்த அளவு வளர்ச்சி அடைந்திருக்காது என தெரிவித்தார். 

டிசம்பர் 10ஆம் தேதிக்குள் ஈரோட்டிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேறும் என்றும் உறுதியளித்தார். மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 68.85 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். 

கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு 4. 5 கோடியில் அலுவலக கட்டடங்கள் கட்டித் தரப்படும் என்றும் கோபி, புஞ்சை, புளியம்பட்டி நகராட்சிகளுக்கு புதிய அலுவலக கட்டடங்கள் கட்டி தரப்படும் எனவும் தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 9,327 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருப்பதாக கூறினார்.  

இதையும் படிங்க: திமுக அரசின் சட்டத்திற்கு எப்போதும் வெற்றிதான்... மாவீரன் பொல்லான் சிலையை திறந்து வைத்த முதல்வர் பெருமிதம்...!

சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் சட்ட சிக்கல்களை தீர்க்க வல்லுனர் குழு அமைக்கப்படும் என்றும் 90 கிராம விவசாயிகளின் திட்ட அனுமதி பட்டாக்கள் நிரந்தர பட்டாக்களாக மாற்றப்படும் என்றும் கூறினார். தோனி மடுவு பகுதியில் புதிய தடுப்பணை கட்டப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 

இதையும் படிங்க: வரலாற்றின் அத்தியாயம்... மாவீரன் பொல்லான் அரங்கத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share