×
 

பாக்.-ஐ விட 20 மடங்கு அதிகமாக இந்தியா பணம் பெற்றாலும் திருப்பி செலுத்தாது..! ஏன் தெரியுமா?

சர்வதேச பண நிதியத்திலிருந்து பாகிஸ்தான் பெறும் கடனைவிட 20 மடங்கு நிதி இந்திய அரசுக்குக் கிடைத்தாலும், அந்தக் கடனை திருப்பிச் செலுத்தத் தேவையில்லை.

சர்வதேச பண நிதியத்திலிருந்து பாகிஸ்தான் பெறும் கடனைவிட 20 மடங்கு நிதி இந்திய அரசுக்குக் கிடைத்தாலும், அந்தக் கடனை திருப்பிச் செலுத்தத் தேவையில்லை. பாகிஸ்தான் ஐஎம்எப் அமைப்பிடமிருந்து பெறும் கடனுக்கு வட்டியும், அசலும் செலுத்த வேண்டும். ஆனால் மத்திய அரசுக்கு கிடைக்கும் நிதிக்கு எந்தவிதமான வட்டியும், அசலும் செலுத்தத் தேவையில்லை. ஆம், இந்த முறையை இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு ரூ.3 லட்சம் கோடி வரை கிடைக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

கடந்த 10ம் தேதி ஐஎம்எப் அமைப்பு பாகிஸ்தானுக்கு 100 கோடி டாலரை கடனாக வழங்கியது. இது 700 கோடி டாலர் கடனில் 2வது பகுதியாக பாகிஸ்தான் பெற்றது. கடந்த 1958ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் 25வது முறையாக திவால் கடனை ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து பெற்றுள்ளது.

இதையும் படிங்க: இந்தியா கொடுத்த மரண அடி.. நள்ளிரவில் பாக்., பிரதமருக்கு போன் போட்டு அலறிய தளபதி..!

பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் கடன் வழங்க ஐஎம்எப் ஒப்புக்கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் 100 கோடி டாலரை விடுவித்து வருகிறது. இந்நிலையில் கூடுதலாக 140 கோடி டாலரை கடன் வழங்கவும் சமீபத்தில் ஐஎம்எப் ஒப்புக்கொண்டது. இதன்படி கடந்த 10ம் தேதி பாகிஸ்தான் 240 கோடி டாலரை கடனாகப் பெற்றது.

இந்த பணத்தின் மூலம் பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுக்கு உதவவும், தீவிரவாதிகளை ஊக்குவிக்கவும், அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கவும், எல்லை கடந்த தீவிரவாதத்தை பரப்பவும் பயன்படும் என்று இந்திய அரசு குற்றம்சாட்டியது. அதை மீறியும் ஐஎம்எப் பாகிஸ்தானுக்கு கடன் வழங்கியது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஈவுத்தொகையாக இந்தியாவுக்கு 3600 கோடி அதாவது இந்திய மதிப்பில் ரூ.3 லட்சம் கோடி கிடைக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். பாகிஸ்தான் திவாலும் சூழலைத் தடுக்க 700 கோடி டாலருக்கு ஐஎம்எப் அமைப்பை தாஜா செய்து கடனை தவணை முறையில் பெறுகிறது. ஆனால் இந்தியாவுக்கு ஆண்டு உபரி வருமானம் மட்டுமே ரிசர்வ் வங்கியிடம்  இருந்து ரூ.2.10 லட்சத்துக்கு மேல் கிடைக்கிறது

கடந்த 2024ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஈவுத்தொகையாக மத்திய அரசு ரூ.2.10 லட்சம் கோடி பெற்றது. ரிசர்வ் வங்கிக்கு கிடைக்கும் உபரி வருமானத்தை அரசுக்கு அளிப்பதே ஈவுத்தொகை. முதலீடுகள், டாலர் முதலீடு, பணத்தை அச்சிடும் கட்டணம் உள்ளிட்டவை மூலம் வருமானம் கிடைக்கிறது. இந்த உபரி வருமானத்தை மத்திய அரசுக்கு ஆண்டு தோறும் ரிசர்வ் வங்கி வழங்குகிறது.

கனரா வங்கியின் முதன்மை பொருளாதார வல்லுநர் மாதவன் குட்டி கூறுகையில் “அந்நியச் செலாவணி செயல்பாடுகள் மற்றும் ரெப்போ வட்டி மாற்றம் மூலம் ரிசர்வ் வங்கி போதுமான லாபத்தை ஈட்டியிருக்க வேண்டும். இந்த முறை ரிசர்வ் வங்கி நிறைய டாலர்களை விற்றுள்ளதால், ஈவுத்தொகை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது, வருமானம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்.. முக்கிய பயங்கரவாதி கதை முடிப்பு.. ருத்ர தாண்டவம் ஆடும் இந்திய ராணுவம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share