×
 

“சில்லறை பையன் சீமான்; நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது!” திருச்செந்தூரில் நாஞ்சில் சம்பத் அதிரடி!

ஜனநாயகன் வரும்போது முதலமைச்சர் நாற்காலி நகரப் போவது உறுதி என்றும், சீமான் ஒரு சில்லறைப் பையன் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் திருச்செந்தூரில் ஆவேசமாக உரையாற்றினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கழகக் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இன்று நடைபெற்றது. இதில் தவெக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, திமுக அரசு மற்றும் சீமான் ஆகியோரை மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார். அவரதுப் பேச்சில் இடம்பெற்ற காரசாரமானத் தாக்குதல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைச் சாடிய அவர், "25 ஆண்டு காலம் இந்தத் தொகுதியில் குப்பைகளைக் கொட்டியே பல கோடிகளைத் தேடி, தற்போது நீதிமன்றத்தில் பொருளாதாரக் குற்றவாளியாக நிற்கும் ஒருவரை வீட்டிற்கு அனுப்பும் நாள் நெருங்கிவிட்டது" எனத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் விஜய் தான் என்பதை வலியுறுத்திய அவர், திமுக-விற்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். "திமுக-விற்காக உழைத்தது உங்கள் குடும்பம் மட்டும்தானா? உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு திருக்குறளை ஒழுங்காகச் சொல்லத் தெரியுமா? அவர் மாநிலச் சுயாட்சி பற்றி ஒரு மணி நேரம் பேசினால் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன்" என சவால் விடுத்தார்.

சீமான் மற்றும் கமல்ஹாசன் குறித்தும் தனதுப் பாணியில் விமர்சித்த நாஞ்சில் சம்பத், சீமான் ஒரு சில்லறைப் பையன்; இந்தத் தேர்தல் முடிவதற்குள் அந்தச் சின்னத்தைக் கல்லறைக்கு அனுப்ப வேண்டும். அரசியல் மாற்றத்திற்காக வந்த உலகநாயகன் கமல்ஹாசன், இப்போது அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் படுத்துக் கிடக்கிறார் எனச் சாடினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் லண்டன் பயணத்தின் போது அணிந்திருந்த உடை மற்றும் நடை குறித்தும் கிண்டல் செய்த அவர், "எங்கள் தளபதி விக்கிரவாண்டியில் ராம் வாக் சென்றார், அவருக்குத் தகுதி இருக்கிறது; யானை ஆட்டுகிறது என்பதற்காகக் கழுதையும் ஆட்டலாமா?" எனக் காட்டமாகப் பேசினார். இறுதியாக, சேப்பாக்கம் மைதானத்தில் விசில் ஊத விதிக்கப்பட்டத் தடையைக் குறிப்பிட்டு, "திமுக-வினரைப் பார்த்தால் அவர்களின் செவி கிழியும் அளவிற்கு விசில் ஊதுங்கள்" என நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார். இக்கூட்டத்தில் திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானத் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!! 234 தொகுதிகள்..!! வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சீமான்..!!

இதையும் படிங்க: “13 கோடி தமிழர்கள் எப்படி சிறுபான்மை?” - மத அரசியலை சுளுக்கெடுத்த சீமான் ஆவேச பேச்சு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share