இன்று இல்லை..!! நாளை வெளியாகிறது NEET UG 2026 ஹால் டிக்கெட்..!! NTA அறிவிப்பு..!!
தேர்வு மைய நுழைவுவாயிலில் தேர்வர்களை பலத்த சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் (NEET UG 2026) அடுத்த மாதம் மே 3-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு மூலம் MBBS, BDS, சித்த மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் இந்தத் தேர்வுக்கு தமிழகத்தில் சுமார் 2 லட்சம் மாணவ-மாணவிகள் உள்பட நாடு முழுவதும் சுமார் 26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இது கடந்த ஆண்டுகளை விட அதிகமான எண்ணிக்கையாகும். இதனால் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை ஒரே ஷிஃப்டில் நடைபெறும். முன்பு இன்று (ஏப்ரல் 26) ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேசிய தேர்வு முகமை தற்போது அதை நாளை (ஏப்ரல் 27) வெளியிடும் என உறுதிப்படுத்தியுள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டை (Admit Card) அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு முயற்சி: ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை..!! கர்ஜித்த பிரதமர் மோடி..!!
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் எப்படி?
- விண்ணப்ப எண் (Application Number)
- பிறந்த தேதி (Date of Birth) அல்லது பாஸ்வேர்ட்
ஆகியவற்றைப் பயன்படுத்தி லாகின் செய்து டவுன்லோட் செய்ய வேண்டும். ஹால் டிக்கெட்டில் மாணவரின் பெயர், பதிவு எண், தேர்வு மையத்தின் முழு முகவரி, தேர்வு நேரம், அனுமதிக்கப்படும் பொருட்கள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்த உடனே அதில் உள்ள அனைத்து விவரங்களையும் கவனமாகப் படித்து புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக, தேர்வு மையத்திற்கு எப்படிச் செல்வது, எந்த நேரத்தில் அங்கு இருக்க வேண்டும், அனுமதிக்கப்படும் ஆவணங்கள் (அடையாள அட்டை, புகைப்படம் உள்ளிட்டவை) மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் (மொபைல் போன், கால்குலேட்டர், குறிப்பேடுகள் போன்றவை) பற்றிய விவரங்களை அறிந்து கொள்வது அவசியம். தேர்வு நாளில் ஹால் டிக்கெட் இல்லாமல் யாரும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நுழைவு வாயிலில் பலத்த சோதனை நடைபெறும். எனவே, முன்கூட்டியே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, விதிமுறைகளைப் பின்பற்றி சென்றால் தேர்வு நாளில் பதற்றமின்றி அமைதியாகத் தேர்வை எழுத முடியும் என்று NTA அறிவுறுத்தியுள்ளது. மேலும், தேர்வுக்கு முன்பாக NTA-வின் மாதிரித் தேர்வுகளை (Mock Tests) பயன்படுத்தி பயிற்சி செய்வது நல்லது. தேர்வு மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உடைக் குறியீடு (Dress Code) உள்ளிட்ட அறிவுறுத்தல்களையும் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
மாணவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் தயாராகி, நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இந்த நீட் தேர்வு மருத்துவக் கனவுகளை நனவாக்கும் முக்கிய தருணம். எனவே, ஹால் டிக்கெட்டை உடனடியாகப் பதிவிறக்கம் செய்து, தேர்வுக்கான இறுதிக் கட்ட தயாரிப்புகளை முழு மூச்சுடன் மேற்கொள்ளுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் உயரும் மதுபானங்களின் விலை..!! மே 1ம் தேதி முதல் அமல்..!! 'குடி'மகன்கள் ஷாக்..!!