×
 

நேபாளத்தில் பள்ளியை நோக்கி பாய்ந்த வெள்ளம்! 1,643 மாணவர்களை காப்பாற்றிய தலைமை ஆசிரியரின் துணிச்சல்!

தலைமை ஆசிரியரின் சமயோசிதமான நடவடிக்கையால் பள்ளியில் இருந்த 1,643 மாணவர்களும் உயிருடன் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின்போது பள்ளியை நோக்கி சேறும் சகதியும் பெருக்கெடுத்து வருவதாக கிடைத்த எச்சரிக்கையை தொடர்ந்து, தலைமை ஆசிரியர் ஒருவர் சில நிமிடங்களில் எடுத்த அதிரடி நடவடிக்கையால் 1,643 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

நேபாளத்தின் திரிசூலி பள்ளத்தாக்கில் திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ராஜேந்திர தவாடி பணியாற்றி வருகிறார். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சேறும் சகதியும் பள்ளியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருப்பதாக அவரது நண்பர் ராஜேந்திர தவாடிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் கிடைத்ததும் நிலைமையின் ஆபத்தை உணர்ந்த தலைமை ஆசிரியர், பள்ளியில் இருந்த 1,643 மாணவர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்கினார். வெள்ளநீர் வேகமாக உயர்ந்து கொண்டிருந்ததால், மாணவர்களை வெளியேற்ற அவருக்கு மிகக் குறுகிய நேரமே இருந்தது.

இதையும் படிங்க: 5 நாட்களாக தகவல் இல்லை! நேபாளத்தில் சிக்கிய 100 தமிழர்களை தேடும் தீவிர பணி! உறவினர்கள் தவிப்பு!

இதையடுத்து பள்ளி மணியை ஒலிக்கச் செய்து வகுப்பறைகளில் இருந்த மாணவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு ஆசிரியர்களுக்கு ராஜேந்திர தவாடி அறிவுறுத்தினார். அதே நேரத்தில் பள்ளி பேருந்து ஓட்டுநர்களையும் தொடர்புகொண்டு, மாணவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

திடீரென ஏற்பட்ட அபாயத்தை உணர்ந்த மாணவர்களில் பெரும்பாலானோர் பள்ளியை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி விரைந்தனர். சில மாணவர்கள் பள்ளிக்கு அருகில் இருந்த மரங்களிலும் தஞ்சம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியரின் சமயோசிதமான நடவடிக்கையால் பள்ளியில் இருந்த 1,643 மாணவர்களும் உயிருடன் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆசிரியர்களிலும் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் காப்பாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

வெள்ளம் ஏற்படும் அபாயம் குறித்து தகவல் கிடைத்ததும் தாமதிக்காமல் செயல்பட்ட ராஜேந்திர தவாடியின் துணிச்சலும், சரியான நேரத்தில் எடுத்த முடிவும் மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியதாக உள்ளூர் மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய பெரும் பாதிப்புகளுக்கு மத்தியில், ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய தலைமை ஆசிரியரின் செயல்பாடு சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் மிதந்து வந்த வங்கி லாக்கர்! பணத்தை பங்கு போட்ட மக்கள்! காத்திருந்த அதிர்ச்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share