×
 

உங்க முடிவு உங்களுக்கே ஆபத்தா மாறும்!! பிரிட்டனுக்கு பகீரங்க எச்சரிக்கை விடுக்கும் இஸ்ரேல்..!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் நடத்தி வர்ற தாக்குதல்கள் இன்னும் ஓயாமல் தொடருது. இந்தப் போரால் 60,000-த்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்காங்க, லட்சக்கணக்கானவங்க வீடு வாசல இழந்து அகதிகளா மாறியிருக்காங்க. குண்டு வெடிப்பு சத்தங்கள், மக்களோட அழுகைக் குரல்கள் இன்னும் காசாவுல எதிரொலிக்குற சூழல்ல, பிரிட்டன் ஒரு பெரிய முடிவு எடுத்திருக்கு.

இஸ்ரேல் தங்களோட நிபந்தனைகளை ஏத்துக்கலைன்னா, செப்டம்பர் 2025-ல நடக்கப் போற ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்துல பாலஸ்தீனத்தை தனி நாடா அங்கீகரிக்கப் போவதாக பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவிச்சிருக்கார். இதுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சு, பிரிட்டனை கடுமையா விமர்சிச்சிருக்கார். 

காசாவில் நிலைமை மோசமாகி, பஞ்சம், பட்டினி மாதிரியான மனிதாபிமான நெருக்கடி உருவாகியிருக்குற சூழல்ல, ஜூலை 29, 2025-ல ஸ்டார்மர் ஒரு அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டினார். இதுல, இஸ்ரேல் காசாவில் போரை நிறுத்தி, மனிதாபிமான உதவிகளுக்கு தடையில்லாம வழி செய்யணும், மேற்குக் கரையில் ஆக்கிரமிப்பை விரிவாக்குறதை நிறுத்தணும், இரு-நாடு தீர்வுக்கு (Two-State Solution) உறுதியளிக்கணும்னு நிபந்தனைகள் வைச்சார்.

இதையும் படிங்க: போரில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்.. துருக்கி தப்பிய மனைவி மறுமணம்.. திடீர் ட்விஸ்ட்..!

இதை இஸ்ரேல் செய்யலைன்னா, செப்டம்பரில் ஐ.நா. கூட்டத்துல பாலஸ்தீனத்தை தனி நாடா அங்கீகரிப்போம்னு சொல்லியிருக்கார். இது பிரிட்டனோட வெளியுறவுக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றமா பார்க்கப்படுது. இதே மாதிரி, பிரான்ஸும் செப்டம்பரில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப் போவதாக அறிவிச்சிருக்கு.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்த அறிவிப்புக்கு கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சு, தன்னோட எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கார். “ஸ்டார்மர் ஹமாசின் கொடூர பயங்கரவாதத்துக்கு வெகுமதி கொடுத்து, பாதிக்கப்பட்டவங்களை தண்டிக்கிறார். இஸ்ரேல் எல்லையில் ஒரு ஜிகாதி நாடு இன்னைக்கு உருவாக்கப்பட்டா, நாளைக்கு அது பிரிட்டனுக்கு பெரிய அச்சுறுத்தலா மாறும்.

பயங்கரவாதிகளை சமாதானப்படுத்துறது எப்பவுமே தோல்வியில தான் முடியும். இது உங்களுக்கும் தோல்வியைத் தரும். இது நடக்காது,”னு ஆவேசமா எழுதியிருக்கார். இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகமும் இதை “ஹமாசுக்கு வெகுமதி”னு குற்றம்சாட்டி, இது போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளையும், பணயக்கைதிகள் விடுதலையையும் பாதிக்கும்னு சொல்லியிருக்கு.

இந்தியா உட்பட 140-க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே பாலஸ்தீனத்தை தனி நாடா அங்கீகரிச்சிருக்காங்க. ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே மாதிரியான நாடுகள் கடந்த வருஷம் இதைச் செய்து, காசாவில் போர்நிறுத்தம் ஏற்படுத்த டிப்ளமோடிக் அழுத்தம் கொடுத்தாங்க.

ஆனா, அமெரிக்காவும், பல ஐரோப்பிய நாடுகளும் இது இரு-நாடு தீர்வோட ஒரு பகுதியா இருக்கணும்னு சொல்றாங்க. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஸ்டார்மரோட இந்த முடிவைப் பத்தி “எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனா நான் இதை ஆதரிக்க மாட்டேன்”னு சொல்லியிருக்கார்

ஸ்டார்மர் இஸ்ரேலுக்கு மட்டுமல்ல, ஹமாசுக்கும் நிபந்தனைகள் வைச்சிருக்கார். ஹமாஸ் எல்லா பணயக்கைதிகளையும் உடனே விடுவிக்கணும், போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கணும், ஆயுதங்களை கைவிடணும், காசாவின் ஆட்சியில் பங்கு வகிக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கார்.

இந்த நிபந்தனைகள் இஸ்ரேல், ஹமாஸ் இரண்டு தரப்பையும் ஒரு பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர முயற்சிக்கிற மாதிரி இருக்கு. ஆனா, நெதன்யாகுவோட கடுமையான எதிர்ப்பு, இஸ்ரேல் இந்த நிபந்தனைகளை ஏத்துக்க வாய்ப்பு குறைவுன்னு காட்டுது.
 

இதையும் படிங்க: 10 மணி நேரம் போர் நிறுத்தம்.. நிம்மதி பெருமூச்சு விடும் காசா.. கவலை தோய்ந்த முகத்தில் சற்றே ஆறுதல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share