×
 

சரணடைய மறுக்கும் ஈரான்..! மிரட்டும் ட்ரம்ப்! ஈரான் மிக கடுமையாக தாக்கப்படும்! ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானை மிகக் கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் போர் உச்சமடைந்துள்ள நிலையில், ஈரான் நிபந்தனையற்ற சரணாகதி அடைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய 'ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) தாக்குதல்களின் விளைவாக, ஈரான் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இனி வரும் காலங்களில் அண்டை நாடுகளின் மீது எந்தவிதமான தாக்குதல்களையும் நடத்த மாட்டோம் என ஈரான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுச் சரணடைந்துள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் நவீன ஏவுகணைகள் மற்றும் இஸ்ரேலின் துல்லியமான வான்வழித் தாக்குதல்களால் ஈரானின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு காலத்தில் பிராந்திய வல்லரசாகத் திகழ்ந்த ஈரான், இப்போது மத்திய கிழக்கின் தோல்வியடைந்த நாடாக (The Loser of the Middle East) மாறியுள்ளது என ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஈரானின் முக்கிய அணுமின் நிலையங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்கள் அமெரிக்கப் படைகளால் செயலிழக்கச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் ராணுவம் நிலைகுலைந்ததே இந்தச் சரணாகதிக்கு முக்கியக் காரணமாகும்.

இதையும் படிங்க: இந்தியாவில் தஞ்சமடைந்த ஈரானிய கப்பல்! கொச்சி துறைமுகத்தில் 183 வீரர்களுக்கு பாதுகாப்பு!

ஈரானின் இந்தச் சரணாகதி அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றமும், அமெரிக்காவின் முழுமையான ஆதிக்கமும் ஏற்படும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஈரானை மீண்டும் சிறந்த நாடாக்குவோம் (MIGA) என்ற தனது முழக்கத்திற்கு இதுவே முதல்படி என்றும் ட்ரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வெள்ளை மாளிகையில் பிரார்த்தனை! ஈரான் போரில் ட்ரம்புக்கு ஆதரவாக மத போதகர்கள் ஜெபம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share