குரங்காட்டும் கர்மா..! அடிமேல் அடி... பாகிஸ்தானில் 12 நாட்கள் 'ஸ்மார்ட்' லாக்டவுன்..!
இந்தியாவின் நடவடிக்கை இன்னும் எடுக்கப்படாவிட்டாலும், பாகிஸ்தானுக்குள் ஊரடங்கு உத்தரவு வடிவில் அந்நாட்டின் பயத்தை வெளிப்படுத்தி உள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுவரை இந்தியாவிலிருந்து எந்த இராணுவ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் அச்சm ஆட்டிப்படைத்து வருகிறது. ஒருபுறம், கராச்சியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே வேளை, இப்போது கைபர் மாவட்டத்தின் ஜம்ருத் பகுதியில் 12 நாள் ஸ்மார்ட் லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை நோய் என அதிகாரப்பூர்வ காரணம் கூறப்பட்டாலும், இந்த லாக்டவுன் விதிக்கப்பட்ட நேரம் தற்செயல் நிகழ்வு அல்ல. ஓய்வு பெற்ற துணை ஆணையர் கேப்டன் பிலால் ஷாஹித் ராவ் பிறப்பித்த உத்தரவால், இப்போது அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளார்.
கைபர் மாவட்டத்தின் உள்ளூர் நிர்வாகம் சுகாதார காரணங்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்று கூறினாலும், இந்தியா பழிவாங்கல் ஏற்படக்கூடும் என்பதால், பாகிஸ்தானின் முக்கிய பகுதிகளில் ஏற்கனவே எச்சரிக்கை முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் தீவிரவாதம் உண்மை... என் தாயையே கொன்று விட்டனர்... உண்மையை கக்கிய பிலாவல்..!
இந்த ஊரடங்கின் போது சில அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ரேஷன் கடைகள், மருந்துக் கடைகள், பொதுக் கடைகள், தந்தூர் மற்றும் அவசர சேவைகள் மட்டுமே வழங்கப்படும். மற்ற அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டிருக்கும். ஜம்ருத் உதவி ஆணையர், கைபர் காவல்துறை கடைகளை கண்டிப்பாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா எந்த இராணுவ நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புகள் பல்வேறு பகுதிகளில் உஷார் நிலையில் உள்ளன. கராச்சியில் ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கைபர் போன்ற பகுதிகளில் நிர்வாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் நடவடிக்கை இன்னும் எடுக்கப்படாவிட்டாலும், பாகிஸ்தானுக்குள் ஊரடங்கு உத்தரவு வடிவில் அந்நாட்டின் பயத்தை வெளிப்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இந்தியா-இஸ்ரேலுக்கு குறி..! லஷ்கர்-இ-தொய்பா தலைவன் மிரட்டல்..! ஆப்பு வைத்து கொள்ளும் பாக்.,!