பாக்., ராணுவத்தின் காமவெறி... 22 வயது வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!
ஃபிட் அண்ட் ஃபைன் இளைஞரான சாஞ்சேசியை பலமுறை பாலியல் ரீதியாக பலவந்தமாக வன்கொடுமை செய்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய அந்த இளைஞன் இளம் லெப்டினன்ட் அர்ஹாம், அவன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். 11 சிக்னல் பட்டாலியனைச் சேர்ந்த லெப்டினன்ட் அர்ஹாம் சாஞ்சேசி, ராவல்பிண்டியில் உள்ள ராணுவ சிக்னல் கல்லூரியில் இளம் அதிகாரிகள் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது தற்கொலை செய்து கொண்டார்.
50 வயதான பிரிகேடியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், அது அந்த இளஞரை தற்கொலை மன அழுத்தத்திற்கு ஆளாக்கியதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகின. 50 வயதான பாகிஸ்தான் பிரிகேடியர் தனது கொழுத்த மனைவியால் சுகம் கிடைக்காததால் சோர்வடைந்து "ஃபிட் அண்ட் ஃபைன்" இளைஞரான சாஞ்சேசியை பலமுறை பாலியல் ரீதியாக பலவந்தமாக வன்கொடுமை செய்துள்ளார்.
அர்ஹாம் சாஞ்சேசி ஒரு டாக்டராக விரும்பினார். ஆனால் அவரது தந்தை அவரை பாகிஸ்தான் ராணுவத்தில் சேர வற்புறுத்தினார். இப்போது அந்த இளைஞர் அவர் இறந்துவிட்டார். அவர் "தற்செயலாக" தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக இராணுவம் கூறுகிறது. இராணுவம் எதை மறைக்கிறது?
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு அடுத்த ஆப்பு... மருந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு!!
ஆனால், அந்த இளம் ராணுவ வீரரின் கடைசி வார்த்தைகள் பாகிஸ்தானின் இறையாண்மையை சுட்டெரிக்கும். "அப்பா, நீ என்னை நரகத்திற்கு அனுப்பினாய். என் தோற்றத்திற்காக என் மூத்த அதிகாரி என்னை பாலியல் பலாத்காரம் செய்தான். இது பாகிஸ்தான் ராணுவத்தில் நடக்கிறது. இந்திய ராணுவமும், பலூச் போராளிகளும் எனக்கு நீதி கிடைக்கச் செய்வார்கள் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.இது இராணுவத்தால் மறைக்கப்பட்டதாக சந்தேகங்களை எழுப்புகிறது.
அர்ஹாமின் நிறைவேறாத கனவை, அவரது தந்தையால் இராணுவத்தில் சேர்க்கப்பட்டதை எடுத்துக்காட்டுகிறது. இது பாகிஸ்தானில் பரந்த சமூக அழுத்தங்களை பிரதிபலிக்கிறது. ஏனென்றால் அங்கு இராணுவ சேவை பெரும்பாலும் மற்ற தொழில்களை விட சிறந்தது என மகிழ்கிறார்கள்.
பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்புடைய பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் சர்ச்சைக்குரியவை. பலமுறை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. பலூசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக, பாலியல் வன்முறை உட்பட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 2022-ல், நைலா குவாத்ரி என்ற ஆர்வலர், பாகிஸ்தான் ராணுவம் பலூசிஸ்தானில் "பாலியல் வன்முறை இல்லங்கள்" (rape houses) நடத்துவதாகவும், இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கொடுமையான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டினார்.
1971- வங்காளதேச விடுதலைப் போரின்போது, பாகிஸ்தான் ராணுவம் பெருமளவில் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டதாக பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாகக் கூறுகின்றன. பாகிஸ்தான் ராணுவம் 30,000 முதல் 35,000 பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. இது மிகப்பெரிய எண்ணிக்கையாக இருந்தாலும், முன்பு இதைவிட அதிகமான பெண்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தால் பெண்கள் மீது பாலியல் வன்முறை நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஒரு இளம் பெண்ணை ராணுவ வீரர்கள் கடத்தி, பல நாட்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது. இது அப்ப்குதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பலூசிஸ்தானில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்முறை உட்பட, ஐ.நா. நிபுணர்களின் கவலையை அதிகரித்துள்ளன. 2025-ல், ஐ.நா. நிபுணர்கள் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு, நீதிக்கு புறம்பான செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் பெண்கள் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார காரணங்களால் பாலியல் வன்முறைக்கு எளிதில் பாதிக்கப்படுகின்றனர். 1980களில் ஜியா-உல்-ஹக் ஆட்சியின்போது, பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் டி.என்.ஏ. ஆதாரங்களைப் பயன்படுத்தி தங்கள் வழக்குகளை நிரூபிக்க அனுமதிக்கப்படவில்லை. இது நீதி பெறுவதற்கு பெரும் தடையாக இருந்தது.
பாகிஸ்தான் ராணுவம் இத்தகைய குற்றச்சாட்டுகளை பொதுவாக மறுத்து, அவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று வாதிடுகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்குள் கால் வைக்காமலேயே கதற விட்ட இந்தியா... உலகையே உலுக்கும் ஒற்றை புகைப்படம்!