×
 

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு..! தொழுகையின் போது நேர்ந்த தாக்குதல்... 15 பேர் பலி..!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் சமீப காலத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் மக்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் மக்கள் கூட இருந்தனர். வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஏராளமான பக்தர்கள் கூடியிருந்த நேரத்தில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் கூறப்பட்டுள்ளது. இதனால் மேலும் என்பது பேர் காயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் தாக்கத்தால் மண்டபத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதம் அடைந்துள்ளது. மீட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உடைந்த கண்ணாடித் துண்டுகள், இரத்தம் தோய்ந்த தரை, அலறியபடி ஓடிய மக்கள் என்று காட்சிகள் மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தன. இந்தச் சம்பவம் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தலைநகரிலேயே இத்தகைய தாக்குதல் நடப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: பலுசிஸ்தானில் பயங்கர துப்பாக்கிச் சூடு..!! 15 பாக். வீரர்கள், 92 பயங்கரவாதிகள் பரிதாப பலி..!!

குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து இஸ்லாமாபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினரும் பாதுகாப்பு படையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பலுசிஸ்தான் மாகாணத்தில் பிரிவினைவாதிகள் சமீப காலமாக கடும் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ள நிலையில் தற்போது பாகிஸ்தானின் தலைநகரிலேயே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பெட்டி பெட்டியாக வெடிபொருட்கள் பறிமுதல்... தர்பூசணி பழங்களின் அடியில் காத்திருந்த அதிர்ச்சி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share