சாவு பயத்தை காட்டிய இந்தியா.. பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்..!
பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி தாக்குதல் கொடுத்து வரும் நிலையில் அந்நாட்டு பிரதமர் ஷெரிப் பதுங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பகல்காம் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பாகிஸ்தானின் தலைநகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் பற்றி எரிகின்றன. இந்திய ராணுவத்தின் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானின் முசாபராபாத் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அத்துமீறிய பாகிஸ்தான் மீது இந்தியா பதில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பதுங்கு குழிக்குள் பாகிஸ்தான் பிரதமர் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெரிஃப் பதுங்குழிக்குள் பதுங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானை விட்டு மூன்று அமைச்சர்கள் ஓடியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!
இதையும் படிங்க: பிறந்த பெண் குழந்தைக்கு தேசப்பக்தியால் சிந்தூரி பெயர்.. பீகார் தம்பதிக்கு குவியும் பாராட்டு