×
 

இப்படிலாமா போன்ல பேசுவீங்க! வெளியான பர்சனல் ஆடியோ! தாய்லாந்து பெண் பிரதமருக்கு பேச்சால் கொந்தளிப்பு!

போன் பேச்சு கசிவு தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ராவை, அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம், ஜூலை 1 முதல் பிரதமர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில் தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்னை நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், எல்லைப் பகுதியில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே கடந்த மே 28-ஆம் தேதி மோதல் ஏற்பட்டது.

இதில் ஒரு கம்போடிய வீரா் உயிரிழந்தாா்.இந்த விவகாரம் தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சத்தில் இருந்தபோது, கம்போடியாவின் முன்னாள் பிரதமரும், அந்த நாட்டு மேலவையான செனட் அவையின் தற்போதைய தலைவருமான ஹன் சென்னுடன் பிரதமா் பேடோங்டாா்ன் அண்மையில் தொலைபேசியில் உரையாடினாா். 

இந்த உரையாடல் பதிவு பின்னர் வெளியில் கசிந்து மிகப் பெரிய சா்ச்சையை ஏற்படுத்தியது. அந்த உரையாடலின்போது, தனது தந்தையும், முன்னாள் தாய்லாந்து பிரதமருமான தக்சின் ஷினவத்ராவின் நண்பா் ஹன் சென்னை ‘அங்கிள்’ என்று நெருக்கத்துடன் அழைத்த பேடோங்டாா்ன், கம்போடியாவுக்கு ஆதரவாகவும் தாய்லாந்து நலன்களுக்கு எதிராகவும் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. 

இதையும் படிங்க: ஏர் இந்தியாவிற்கு வந்த அடுத்த சோதனை.. பாம் இருப்பதாக வந்த மிரட்டல்.. பரபரப்பான தாய்லாந்து ஏர்போர்ட்..!

தாய்லாந்து ராணுவ தளபதியின் பேச்சைக் கேட்க வேண்டாம் என்றும், அவா் ‘எதிா்த்தரப்பைச் சோ்ந்தவா்’ என்றும் அந்த உரையாடலின்போது ஹன் சென்னிடம் பேடோங்டாா்ன் கூறியது தாய்லாந்தில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் பிரதமர் ஷினவத்ரா, தாய்லாந்து ராணுவ தளபதியை எதிரி என்றும், பயனற்றவற்றை பேசுவதாகவும் கூறியிருந்தார். இந்த உரையாடல்கள் கசிந்தன. கிட்டத்தட்ட ஹுன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா 17 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார்.

உரையாடல் பொதுவெளியில் கசித்ததால் ஏற்பட்ட சா்ச்சையைத் தொடா்ந்து, இது தொடா்பாக பேடோங்டாா்ன் மன்னிப்பு கோரினாா்.இருந்தாலும், தேசியவாதத் தலைவா்கள் மற்றும் அமைப்பினா் அவருக்கு எதிராக அணிதிரண்டனா். தொடர்ந்து தாய்லாந்து பிரதமருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதை தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டது.

டோங்டாா்ன் நோ்மையின்றி நடந்துகொண்டதாகவும் அரசியலமைப்பு, நெறிமுறைகளை மீறியதாகயாகவும் குற்றஞ்சாட்டி 36 செனட் சபை உறுப்பினா்கள் அரசியல் சாசன நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பேடோங்டாா்னின் மீதான நெறிமீறல் குற்றச்சாட்டை முழுமையாக விசாரித்து உறுதி செய்து, அவரை பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கும்வரை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது.

இந்த முடிவுக்கு ஆதராவக 7 நீதிபதிகளும், எதிராக 2 நீதிபதிகளும் வாக்களித்தனா். கம்போடியாவை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஆட்சி செய்து, இன்னும் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் ஹன் சென், பேடோங்டாா்ன் ஷினவத்ரா குடும்பத்தின் பழைய நண்பராக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்ப்பு குறித்து ஷினவத்ரா கூறியதாவது: எனது பணிக்கு இடையூறு ஏற்படுவதை நான் விரும்ப வில்லை. நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்கிறேன். நீதிமன்ற உத்தரவால் நான் வேதனையில் உள்ளேன். இவ்வாறு ஷினவத்ரா கூறினார்.

இதையும் படிங்க: அஜித் மீது திருட்டு பட்டம் சுமத்திய பெண் தலைமறைவு! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.. அவிழும் முடிச்சுகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share