×
 

தெலுங்கானாவுக்கு வயசு 12!! பிரதமர் மோடி செஞ்சுக்கொடுத்த பிராமிஸ்! மத்திய அரசு உறுதி!

வளர்ச்சியடைந்த இந்தியா எனும் நமது கனவை நனவாக்க, தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளது என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் உருவான 12ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மாநில மக்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா (விக்சித் பாரத்) என்ற தேசிய கனவை நனவாக்க தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்துக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: “தெலுங்கானா மக்களுக்கு எனது உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துகள். படைப்பாற்றல் மற்றும் வணிகத் திறமைக்கு பெயர் பெற்றவர்கள் தெலுங்கானா மக்கள். துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் போராட்ட உணர்வுக்கு அடையாளமான மகத்தான வரலாறு மற்றும் புகழ்பெற்ற கலாசாரத்தை இம்மாநிலம் கொண்டுள்ளது.

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது கனவை நனவாக்கும் பயணத்தில் தெலுங்கானாவின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்புடன் உள்ளது. தெலுங்கானா மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், வெற்றியுடனும் வாழ வேண்டும் என பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழக ஆசிரியரை பாராட்டிய பிரதமர் மோடி!! பள்ளிகளுக்கு ஆற்றிய அளப்பரிய பங்கு!! யார் இந்த கிரிஜா அம்மா?!

2014 ஜூன் 2ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி (டிஆர்எஸ்) தலைவர் கே. சந்திரசேகர் ராவ் முதல் முதலமைச்சராக பொறுப்பேற்றார். தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக உள்ளார்.

தெலுங்கானா உருவாக்கத்துக்கு பல ஆண்டுகால போராட்டம் நடைபெற்றது. பிரிவினைக்குப் பிறகு தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் மாநிலம் வளர்ச்சி கண்டுள்ளது. ஹைதராபாத் நகரம் இந்தியாவின் முக்கிய ஐடி மையங்களில் ஒன்றாக திகழ்கிறது.

பிரதமர் மோடியின் வாழ்த்து செய்தி தெலுங்கானா மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மத்திய அரசின் முழு ஆதரவு மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு பெரும் உத்வேகம் அளிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: சோழர்களின் கடல் சாம்ராஜ்ஜியம் எவ்வளவு வலிமையானது! வியந்து பாராட்டிய பிரதமர் மோடி!! மன் கி பாத் நிகழ்ச்சியில் உரை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share