×
 

“இந்திய வம்சாவளியினரின் சாதனைகள் நமக்குத் தனிப் பெருமை!” மலேசியாவில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

மலேசியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் இந்திய வம்சாவளித் தலைவர்களை (PIO) சந்தித்துப் பாராட்டு தெரிவித்தார்.

மலேசியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பொது வாழ்வில் முத்திரை பதித்து வரும் இந்திய வம்சாவளி (PIO) தலைவர்களைச் சந்தித்து நெகிழ்ச்சியானக் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இந்தச் சந்திப்பு குறித்துப் பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மலேசிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், செனட்டர்கள் உள்ளிட்ட மிகச்சிறந்த இந்திய வம்சாவளித் தலைவர்களைச் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அவர்கள் இந்தியாவுடன் கொண்டுள்ள ஆழ்ந்த உணர்வுப்பூர்வமானப் பிணைப்பு, எங்களதுப் பேச்சின் போது வெளிப்படையாகத் தெரிந்தது.

மலேசியாவின் வளர்ச்சி மற்றும் பொது வாழ்வில் இந்தத் தலைவர்கள் எட்டியுள்ளச் சாதனைகள் மகத்தானவை. அவர்களின் கல்வி, அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்புகள் ஒவ்வொரு இந்தியருக்கும் அளவற்றப் பெருமிதத்தை அளிக்கிறது எனப் புகழாரம் சூட்டியுள்ளார். மலேசிய வாழ் இந்தியர்கள் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு உயிருள்ளப் பாலமாகத் திகழ்வதோடு, கலாச்சார ரீதியாகவும் இந்தியாவை மலேசியாவுடன் இணைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மலேசிய உறவை இணைக்கும் பாலமாக தமிழ் மொழி திகழ்கிறது - பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

இந்தச் சந்திப்பின் போது, இந்தியா - மலேசியா இடையிலான வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதில் இந்திய வம்சாவளியினரின் பங்கு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் இந்தப் பயணம் மற்றும் மலேசிய வாழ் இந்தியர்களுடனானச் சந்திப்பு, அந்நாட்டில் உள்ளத் தமிழ் மக்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

இதையும் படிங்க: மலேசிய உறவை இணைக்கும் பாலமாக தமிழ் மொழி திகழ்கிறது - பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share