×
 

எல்லாரும் ரிப்போர்ட் கார்ட் காட்டுங்க!!! மத்திய அமைச்சர்களுக்கு மோடி கிடுக்குப்பிடி! பரபரக்கும் டெல்லி!

துறை ரீதியாக, இது வரையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் சாதனை திட்டங்கள் என்ன என்பது குறித்து, விரிவான, 'ரிப்போர்ட் கார்டு' தயாரித்து அளிக்கும்படி, அனைத்து மத்திய அமைச்சர்களையும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.

புதியதாக கட்டப்பட்ட 'சேவா தீர்த்' அலுவலகத்திற்கு பிரதமர் அலுவலகம் மாறிய பிறகு, மத்திய அமைச்சரவை கூட்டங்கள் களை கட்டத் தொடங்கியுள்ளன. 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த புதிய வளாகத்தில் நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்களுடன் ஆழமான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்திய கூட்டத்தில், பிரதமர் மிக முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். ஒவ்வொரு மத்திய அமைச்சரும் தங்கள் துறையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள், சாதனை திட்டங்கள் குறித்து விரிவான 'ரிப்போர்ட் கார்டு' தயாரித்து அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதற்கென பிரத்யேக படிவத்தை மத்திய அமைச்சரவை செயலகம் அனைத்து அமைச்சகங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.

இந்த ரிப்போர்ட் கார்டில் அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டிய முக்கிய கேள்விகள் பல உள்ளன. தங்கள் துறையில் எந்தெந்த சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன? புதிதாக கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எவை? அவை தற்போது எந்த நிலையில் உள்ளன? பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டதா? ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வளவு செலவிடப்பட்டது?

இதையும் படிங்க: இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!! மதுரை, புதுச்சேரியில் துவக்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன?!

மீதமுள்ள நிதிக்கு காரணம் என்ன? திட்டங்கள் நிறைவேற்றப்படும் போதும், நிறைவேற்றப்பட்ட பிறகும் ஆய்வு செய்தீர்களா? எத்தனை முறை ஆய்வு நடத்தினீர்கள்? ஆய்வில் தெரியவந்தவை என்ன? திட்ட நிறைவேற்றத்தில் திருப்தியா? கூடுதல் யோசனைகள் என்ன? பயனாளி மக்களை சந்தித்தீர்களா? அவர்களிடமிருந்து கிடைத்த கருத்துகள் என்ன? என்று அடுக்கடுக்கான கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு தாங்கள் சாதித்த மிக முக்கிய சாதனைகள் எவை என்றும் கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமைச்சர் மாறினாலும் துறை திட்டங்கள், சீர்திருத்தங்கள் தடங்கலின்றி தொடர வேண்டும் என்பதை பிரதமர் கண்டிப்புடன் வலியுறுத்தியுள்ளார்.

2047-ஆம் ஆண்டுக்குள் 'விக்சித் பாரத்' - வளர்ந்த இந்தியா இலக்கை அடைய, ஒவ்வொரு துறையும் தெளிவான செயல்திட்டத்துடன் செயல்பட வேண்டும் என்பதே இந்த உத்தரவின் நோக்கம். அமைச்சர்கள் தங்கள் துறை திட்டங்களை தொடர்ச்சியாக கண்காணித்து, ரிப்போர்ட் கார்டு தயாரிக்க வேண்டும். வரும் அமைச்சரவை கூட்டங்களில், தேவைப்பட்டால் இந்த ரிப்போர்ட் கார்டு விவரங்களை விரிவாக விளக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மத்திய அரசின் 'ரிஃபார்ம் எக்ஸ்பிரஸ்' எனப்படும் சீர்திருத்த பயணத்தை மேலும் வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் தங்கள் துறைகளை திறம்பட நிர்வகிப்பதற்கும், மக்களுக்கு உண்மையான பயனை அளிப்பதற்கும் இது வலுவான அடித்தளமாக அமையும்.

இதையும் படிங்க: சப்தமில்லாமல் மோடி படைத்த அடுத்த சாதனை!! அதிபர் ட்ரம்ப்பே மோடிக்கு அப்புறம்தான்!! இன்ஸ்டாகிராமில் 10 கோடி பாலோவர்ஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share