பற்றி எரியும் மத்திய கிழக்கு: UAE-க்கு அதிபருக்கு போன் போட்ட மோடி... ஈரான் - இஸ்ரேல் போருக்கு நடுவே ஆலோசித்தது என்ன?
ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகம்மது பின் சையத் அல் நஹ்யானுடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
அணுசக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய போர் நேற்று 18-வது நாளாக நீடித்தது. இப்போரில் ஈரானின் ராணுவ தளங்கள், போர்க் கப்பல்கள், விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கி வருகிறது.
இதனிடையே உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பாதையாக உள்ள ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹார்மூஸ் ஜலசக்தியை மூடிவிட்டதால் மாற்று வழியில் கச்சா எண்ணெய் சென்று விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி வரும் ஈரான், 3 நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள புஜாயிரா துறைமுகத்தின் மீது ஈரான் படைகள் ட்ரோன்கள் மூலம் கடும் தாக்குதல் நடத்தின.
ஹார்மூஸுக்கு அருகேயுள்ள முக்கிய துறைமுகமான புஜாயிரா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரானை நிர்மூலமாக்குவோம் என்று டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில், பதிலடி கொடுக்கவும் தயாராக இருப்பதாக ஈரான் கூறுவதால், வளைகுடாவில் போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டே செல்கிறதே தவிர தணிந்தபாடில்லை.
இதையும் படிங்க: நீடிக்கும் பதற்றம்..!! UAE மீது விடாமல் தாக்குதல் நடத்தும் ஈரான்..!! துபாய், அபுதாபி பங்குச்சந்தைகள் 2 நாட்கள் மூடல்..!!
இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகம்மது பின் சையத் அல் நஹ்யானுடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் மீது ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியாவில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை விரைவாக மீட்டெடுக்க இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர், ஹார்மூஸ் ஜலசந்தியைக் கடக்கும் இந்தியா கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!