பொள்ளாச்சி வழக்கை போல அண்ணா பல்கலை. வழக்கிலும் போராடுங்கள்... அண்ணாமலை வலியுறுத்தல்!
பொள்ளாச்சி வழக்கைப் போல அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கிலும் நீதி கிடைக்க போராட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேல், துணிச்சலாகப் போராடி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தந்துள்ள பாதிக்கப்பட்ட சகோதரிகள் அனைவருக்கும், இந்தத் தீர்ப்பு ஓரளவாவது மன ஆறுதல் அளிப்பதாக அமையும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.
இந்த வழக்கில் நியாயம் கிடைக்கப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிரான வழக்குகளில், தாமதமின்றிச் செயல்படவும் வலியுறுத்தினார். மேலும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறை வழக்கில் விரைவாக நியாயம் கிடைக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: நீடூழி வாழுங்கள் அண்ணா! எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முக்கிய புள்ளி..!
இதையும் படிங்க: 2.0-வாம் ல.. கூச்சமே இல்லையா? வீட்டுக்கு போங்கய்யா..! கொக்கரித்த பாஜக தலை..!