×
 

விளாடிமிர் புடின் உயிருக்கு ஆபத்து? பதுங்குகுழியில் தஞ்சம்? ராணுவ புரட்சி அச்சத்தால் ரஷ்யா பீதி!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உயிருக்கு ஆபத்திருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளதால், அவர் பல வாரங்களாக பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் மீதான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனால் அவர் பல வாரங்களாக ரகசிய பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாக பிரபல பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான ‘பைனான்சியல் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய செல்வந்தர்கள் சிலர் புடினின் ஆட்சியை கவிழ்க்க சதி திட்டமிட்டுள்ளதாகவும், அவரது உயிருக்கு உண்மையான அச்சுறுத்தல் இருப்பதாகவும் உளவுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக உக்ரைன் நடத்திய ‘ஆப்பரேஷன் ஸ்பைடர்வெப்’ என்ற ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு புடின் கடும் பீதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் அவரது பாதுகாப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோவை விட்டு வெளியேறிய புடின், ரஷ்யாவின் கிராஸ்னோடர் பகுதியில் உள்ள அதி நவீன ரகசிய பதுங்கு குழியில் இருந்து போரை வழிநடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வல்லரசு நாட்டின் அதிபராக உலக அரங்கில் வலம் வந்த புடின், தற்போது தன் நாட்டு ராணுவத்தையும், உக்ரைன் ட்ரோன்களையும் கண்டு அஞ்சி பதுங்கு குழியில் ஒளிந்திருப்பது உலக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இடி, மின்னல், சூறைக்காற்று!! 22 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்!! கொட்டக்காத்திருக்கும் கனமழை!

புடின் மீதான கொலை முயற்சி மற்றும் ராணுவ புரட்சி அச்சம் அவரது அதிபர் மாளிகையை உலுக்கி வருவதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் நீண்டு கொண்டே செல்லும் நிலையில், ரஷ்ய உள்நாட்டு அரசியல் சூழலும் புடினுக்கு சவாலாக மாறியுள்ளது. 

இந்த தகவல்கள் உண்மையா அல்லது போர் நேரத்தில் பரப்பப்படும் திட்டமிட்ட செய்திகளா என்பது குறித்து தெளிவான உறுதிப்படுத்தல் இன்னும் வரவில்லை. எனினும், புடினின் பாதுகாப்பு ஏற்பாடுகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. உலக அரசியல் நிபுணர்கள் இந்த சம்பவத்தை ரஷ்ய-உக்ரைன் போரின் திசையை மாற்றக்கூடிய முக்கிய திருப்புமுனையாகவும் பார்க்கத் தொடங்கியுள்ளனர். 

இதையும் படிங்க: இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை!! நெல்லையில் 168 மி.மீட்டரில் கனமழை பதிவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share