#BREAKING சோதனை மேல் சோதனை... விடிந்ததுமே அன்பில் மகேஷுக்கு இறங்கிய இடி... ஷாக்கில் திமுக...!
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளி தரம் உயர்த்துதல் உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் திமுக நிர்வாகியாக இருக்கக்கூடிய அரசகுமார் என்ற நபர் ஏற்கனவே ஜூன் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறி ஆதிக்கராஜ் ராஜா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் இதுவரை 177 தனியார் பள்ளிகள் புகார் அளித்துள்ள நிலையில், இது தொடர்பாக தற்போது முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விடிந்ததுமே இப்படியா?... கே.என்.நேரு வீட்டிற்கு ஓடோடி சென்ற அன்பில் மகேஷ்... திருச்சியில் குவியும் திமுகவினர்...!
திருச்சி, சென்னை உள்ளிட்ட ஆறு இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 244 சாட்சியங்களிடம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மூலம் பல கோடி ரூபாய் பெறப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக நிர்வாகியாக இருக்கக்கூடிய முத்துக்குமார், அன்பில் மகேஷின் நெருங்கிய நண்பராக இருந்தவர் என்றும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு லுக் அவுட் நோட்டீஸையும் போலீசார் பிறப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறி தற்போது இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் உள்ள அவரது வீடு, அதேபோல் சென்னையில் கிரீன்குள்ளா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் 360 சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் தேனாம்பேட்டை, டி.நகர் பகுதியில் செயல்பட்டு வந்த அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளி தரம் உயர்வு மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி அரசகுமார் உள்ளிட்டோர் ரூ.100 கோடி வரை பணத்தை மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காளிகிராமத்தில் பதிவு செய்யப்படாத தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற அமைப்பின் மூலமாக இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும், பல்வேறு தனியார் பள்ளிகளை மிரட்டி இவர்கள் பணம் பறித்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அரசகுமார் கைது செய்யப்பட்டு, அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திருச்சி, சென்னை உள்ளிட்ட ஆறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே பேரதிர்ச்சி... கார் விபத்தில் ஒரு குடும்பமே காலி... தந்தை, தாய், மகன் பலி...!