சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்?! 12 பேர் பலி, 300-க்கும் மேற்பட்டோர் காயம்!
தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 4 பேர் சவுதி அரேபியர்கள். மேலும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 2 பேர், அமெரிக்கா, எகிப்து, ஜோர்டான், சிரியா, பாலஸ்தீனம் மற்றும் சூடானைச் சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரியாத்: சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். 309 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் ஒரு அமெரிக்கரும் அடங்குவதாக சவுதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலையத்தில் தாக்குதல்!
ரியாத் விமான நிலையம் மீது அக்டோபர் 10-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் பயணிகள் முனையம் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையத்தில் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பாதிப்பு மற்றும் சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் ரியல் ஹீரோ சுமித் மச்சார் உடல்நிலை எப்படி இருக்கு? இந்திய தூதரகம் வெளியிட்ட அப்டேட்!
தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 4 பேர் சவுதி அரேபியர்கள். மேலும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 2 பேர், அமெரிக்கா, எகிப்து, ஜோர்டான், சிரியா, பாலஸ்தீனம் மற்றும் சூடானைச் சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த 309 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது குற்றச்சாட்டு!
ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என சவுதி தலைமையிலான கூட்டுப் படை குற்றம்சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் இந்த வாரத்தில் விமான நிலையம் குறிவைக்கப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும். இதற்கு முன்னர் நடந்த தாக்குதல்களில் விமானி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச அளவில் அதிகரிக்கும் பதற்றம்!
பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன்படுத்தும் விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளானது பிராந்திய பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தாக்குதல்களைக் கண்டித்துள்ளன. சவுதி அரேபியா மற்றும் ஏமனில் நீடித்து வரும் மோதல் மேலும் தீவிரமடையுமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.
விமானப் பயணிகள் விமான நிறுவனங்களின் அறிவிப்புகளைப் பார்த்து, தங்களது பயண நேரம் மற்றும் விமானச் சேவை நிலவரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதையும் படிங்க: சவுதியில் அடுத்தடுத்து ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்! மத்திய கிழக்கில் நிலைமை மோசமாகலாம்- அமெரிக்கா வார்னிங்!