×
 

70க்கும் மேற்பட்ட ஏவுகணைகள்!! 650 ட்ரோன்கள்!! உக்ரைனை உருக்குலைத்த ரஷ்யா!! 22 பேர் பலி!

உக்ரைனில் ஒரே இரவில் ரஷ்யா 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும், 650 ட்ரோன்களையும் பயன்படுத்தி நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

ரஷ்யா மீண்டும் மிகப்பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரே இரவில் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் 650 ட்ரோன்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 130-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களாக உக்ரைனின் பல பகுதிகளில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் ரஷ்யா, இந்த முறை பல நகரங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. தாக்குதலால் குடியிருப்பு பகுதிகள், கட்டிடங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ உரையில், இந்த தாக்குதல் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அவர், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.

இதையும் படிங்க: விளாடிமிர் புடின் உயிருக்கு ஆபத்து? பதுங்குகுழியில் தஞ்சம்? ராணுவ புரட்சி அச்சத்தால் ரஷ்யா பீதி!

மேலும், உக்ரைன் உளவுத்துறை தகவல்களின்படி, அடுத்த சில மணி நேரங்களிலும் பெரிய அளவிலான தாக்குதல்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார். இதனால் பாதுகாப்பு அமைப்புகள் முழு கண்காணிப்பில் செயல்பட்டு வருவதாகவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் வான் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்த மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் கூட்டணி நாடுகள் ஏவுகணை தடுப்பு அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே நேரத்தில், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் நாடுகளுக்கு நன்றி தெரிவித்த ஜெலன்ஸ்கி, குறிப்பாக இத்தாலியின் உதவியை பாராட்டியுள்ளார். உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த தாக்குதல் சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 90 ஏவுகணை!! 700 ட்ரோன்கள்!! உக்ரைனை உருக்குலைய வைத்த ரஷ்யாவின் தாக்குதல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share