ரஷ்யா மீது 600+ ட்ரோன்கள் ஏவி உக்ரைன் நடத்திய மெகா தாக்குதல்! 6 பேர் பலி! 4 ஆண்டுகளாக ஓயாத போர்!!
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். ரஷ்யாவும் பதிலுக்கு 600 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி இருக்கிறது.
ரஷ்யா–உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளும் மீண்டும் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலடியாக ரஷ்யா மீது உக்ரைன் ஒரே நேரத்தில் 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா–உக்ரைன் போர் தொடங்கி நான்கு ஆண்டுகளை கடந்துள்ள போதிலும், இதுவரை நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்ட பல்வேறு சமரச முயற்சிகளும் இதுவரை எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.
இந்த சூழலில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலால் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், முழுமையான சேத விவரங்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கொந்தளிக்கப் போகும் காஸ்பியன் கடல்... ஈரானை அழிக்க அமெரிக்காவின் நரித்தனம்... டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்திப்பின் பகீர் பின்னணி...!
இதற்கு பதிலடியாக உக்ரைன் ரஷ்யாவை நோக்கி மிகப்பெரிய அளவில் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் அலை அலையாக 600-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் ரஷ்ய பகுதிகளை நோக்கி ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தகவலை உறுதி செய்துள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவையும் சுற்றியுள்ள பகுதிகளையும் நோக்கி ட்ரோன்கள் வந்ததாகவும், அவற்றை எதிர்கொள்ள பாதுகாப்புப் படைகள் நடவடிக்கை மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், உக்ரைன் நடத்திய இந்த மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது சொத்து சேதம் தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இதனால் ரஷ்யா–உக்ரைன் போரில் தாக்குதல்களின் தீவிரம் மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச அளவில் கவனம் திரும்பியுள்ளது.
இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்துக்கான புதிய முயற்சிகள் எப்போது தொடங்கும் என்பதே தற்போது சர்வதேச நாடுகளின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: ஈரானுக்கு உதவுகிறதா ரஷ்யா? புடினிடம் நேரடியாக கேட்பேன்! ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டுக்கு டிரம்ப் அதிரடி!