×
 

ஆத்திரத்தை கொட்டித்தீர்க்கும் ரஷ்யா..!! உக்ரைன் மீது அட்டாக்..!! 3 பேர் பரிதாப பலி..!!

உக்ரைனின் துறைமுக நகரங்களான ஒடிசா, மைகொல்வியா ஆகிய நகரங்களில் உள்ள துறைமுக உள்கட்டமைப்புகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது.

ரஷியா - உக்ரைன் இடையேயான போர் இன்று 1,599வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் போரில் இரு நாடுகளின் ராணுவ வீரர்கள் மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக வாழும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், முக்கிய நகரங்கள், மின்சார நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ராணுவ உதவி, நவீன ஆயுதங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பொருளாதார ஆதரவை வழங்கி வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மேற்கொண்ட போர் நிறுத்த முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்காததால், மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், இன்று ரஷிய படைகள் உக்ரைனின் முக்கிய துறைமுக நகரங்களான ஒடிசா மற்றும் மைகொலைவ் பகுதிகளை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் துறைமுக உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததுடன், மூன்று பேர் உயிரிழந்ததாகவும், மேலும் மூவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: 600 ட்ரோன் தாக்குதல்! ஆடிப்போனது ரஷ்யா!! இதுவரையில் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது உக்ரைன்!

இதற்கு பதிலடியாக, கருங்கடல் பகுதியில் செயல்பட்டு வரும் ரஷிய கடற்படை கப்பல்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கருங்கடல் பகுதி இரு நாடுகளுக்கும் ராணுவ மற்றும் வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருப்பதால், அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால், போர் விரைவில் முடிவுக்கு வரும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

இதையும் படிங்க: ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்... சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share