மீண்டும் குலுங்கியது ரஷ்யா.. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்.. மீண்டும் தாக்குமா சுனாமி?
ரஷ்யாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ரஷ்யாவில் கடந்த புதன்கிழமை (ஜூலை 30, 2025) ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆக ஒரு பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. இது ரஷ்யாவில் பதிவான நிலநடுக்கங்களிலேயே மிகவும் வலிமையானதுனு சொல்றாங்க. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் கம்சாட்கா தீபகற்பத்துக்கு 74 மைல் தொலைவில், 13 மைல் ஆழத்தில் தாக்கியது.
இதனால சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு, குரில் தீவுகளில் உள்ள செவிரோ-குரில்ஸ்க் பகுதியில் 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கின. ஜப்பான், ஹவாய், பிரெஞ்சு பாலினேஷியா, சிலி உள்ளிட்ட இடங்களிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனாலும், ரஷ்ய அரசு இந்த நிலநடுக்கத்தால எந்த உயிரிழப்பும், பெரிய பாதிப்பும் இல்லைனு அறிவிச்சது.
இந்த பரபரப்பு அடங்கறதுக்குள்ளே, இப்போ மறுபடியும் ரஷ்யாவில் நிலநடுக்கம் ஒன்னு தாக்கியிருக்கு. இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1, 2025) பின்னிரவு 11:50 மணிக்கு, குரில் தீவுகளுக்கு கிழக்கே இந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கு. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக இந்த நிலநடுக்கத்தை அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் (USGS) பதிவு பண்ணியிருக்கு.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு சலுகை காட்டும் ட்ரம்ப்.. 29-ல் இருந்து 19%-ஆக குறைந்த வரி..
இது செவிரோ-குரில்ஸ்க்குக்கு 144.8 கிமீ தெற்கு-தென்மேற்கே, 48.6 கிமீ ஆழத்தில் தாக்கியது. இந்த நிலநடுக்கத்தால உயிரிழப்பு அல்லது பாதிப்பு ஏதும் ஏற்பட்டதா, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதானு இன்னும் தகவல் இல்லை.
கடந்த புதன்கிழமை நிலநடுக்கத்துக்கு பிறகு, 16 மணி நேரத்துக்குள்ள 4.4 ரிக்டர் அளவில் 125 பின் அதிர்வுகள் (aftershocks) பதிவாகியிருக்கு. இதனால, மக்கள் இன்னும் பயத்தோட தான் இருக்காங்க.
குரில் தீவுகள், கம்சாட்கா உள்ளிட்ட பகுதிகள் பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் (Pacific Ring of Fire)னு சொல்லப்படுற நிலநடுக்கம், எரிமலை செயல்பாடுகள் அதிகமா நடக்குற பகுதியில இருக்கு. 1990-ல இருந்து இந்த பகுதியில் 5.0 ரிக்டருக்கு மேல் உள்ள 700 நிலநடுக்கங்கள் பதிவாகியிருக்கு.
புதன்கிழமை நிலநடுக்கத்தின்போது, செவிரோ-குரில்ஸ்க் துறைமுகமும் மீன் பதப்படுத்தும் ஆலை ஒன்னும் சுனாமி அலைகளால பாதிக்கப்பட்டது. ஆனா, உள்ளூர் மக்கள் உயரமான இடங்களுக்கு தப்பிச்சதால பெரிய அளவில உயிரிழப்பு இல்லை. இப்போ இந்த புது 6.2 ரிக்டர் நிலநடுக்கம் மக்களுக்கு மறுபடியும் அச்சத்தை கிளப்பியிருக்கு. மக்கள் இன்னும் “இன்னொரு சுனாமி வருமோ”னு பயந்துட்டு இருக்காங்க.
ரஷ்யாவோட இந்த பகுதி எப்பவுமே நிலநடுக்கத்துக்கு ஆளாகுற இடம். 1952-ல இதே கம்சாட்காவில் 9.0 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியிருக்கு. இப்போ 8.8 ரிக்டர் நிலநடுக்கம் உலக அளவில் 1900-க்கு பிறகு நடந்த 8 வலிமையான நிலநடுக்கங்களில் ஒன்னு. இந்த புது நிலநடுக்கம் சுனாமியை தூண்டலனாலும், மக்கள் இன்னும் எச்சரிக்கையா இருக்காங்க. தேர்தல் பரபரப்பு, அமெரிக்காவோட பொருளாதாரத் தடைகள், அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் அச்சுறுத்தல் மத்தியில இந்த நிலநடுக்கம் ரஷ்யாவுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுத்திருக்கு. மக்கள் இப்போ பயத்தோடவே இருக்காங்க.
இதையும் படிங்க: ரஷ்யா நோக்கி செல்லும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்கள்.. ட்ரம்ப் நடவடிக்கையால் தொற்றிய போர் பதற்றம்..!