வலுக்கும் கோரிக்கை... கடலில் இறங்கி போராடிய தூய்மை பணியாளர்கள் மீது பாய்ந்த வழக்கு... போலீஸ் அதிரடி ..!
சென்னை மெரினாவில் கடலில் இறங்கி போராடிய தூய்மை பணியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சமீப நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறப்பட்ட நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் தூய்மை பணியாளர்களுக்காக வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. மேலும் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு சலுகைகள் தூய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டன. தூய்மை பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறுகையில், மண்டலம் 5 மற்றும் 6 மட்டுமல்லாது அனைத்து மண்டலங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும் மற்ற மண்டலங்களில் உள்ள தூய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்ததன் பேரில் அவர்களுக்கும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அடுத்த மாதம் முதல் ஊதிய உயர்வு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேலையும் உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் துவங்கி வைப்பார் என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: பழையபடி வேலை வேணும்... எங்களால முடியல.! தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்... !
இருப்பினும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இதனிடையே சென்னை மெரினாவில் கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மெரினாவில் கடலில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.பணி நிரந்தரம், தனியார்மயம் எதிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தி கடலில் இறங்கி போராட்டம் நடத்திய 83 தூய்மைப் பணியாளர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சபாஷ்...! தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளையும் உணவு... ரூ.186 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு...!