வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

சபாஷ்…! தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளையும் உணவு… ரூ.186 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு…!

தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சமீப நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறப்பட்ட நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் தூய்மை பணியாளர்களுக்காக வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. மேலும் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு சலுகைகள் தூய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டன.

தூய்மை பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறுகையில், மண்டலம் 5 மற்றும் 6 மட்டுமல்லாது அனைத்து மண்டலங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும் மற்ற மண்டலங்களில் உள்ள தூய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்ததன் பேரில் அவர்களுக்கும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த இருந்தார். இந்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அடுத்த மாதம் முதல் ஊதிய உயர்வு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேலையும் உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் துவங்கி வைப்பார் என்று கூறியிருந்தார். 

இதையும் படிங்க: முடிஞ்சுது தீபாவளி… சென்னையில் இத்தனை மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகளா? அதிர்ச்சி ரிப்போர்ட்…!

இதனிடையே, தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.186 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு! எப்போது? முக்கிய அப்டேட் கொடுத்த மேயர் பிரியா…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी