நீ சொன்னா நான் புள்ள பெத்துக்கணுமா? ஆர்எஸ்எஸ் தலைவருக்கு சீமான் பதிலடி
ஒவ்வொரு இந்தியரும் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சுக்கு சீமான் பதிலடி கொடுத்தார்.
ஆர்.எஸ்.எஸ்-இன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று டெல்லியில் நடைபெற்ற வியாக்யான்மாலா என்ற மூன்று நாள் நிகழ்ச்சியின் இறுதி நாளில் ஒவ்வொரு இந்தியரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார். இந்தியாவின் மக்கள்தொகை கொள்கை 2.1 என்ற மொத்த பிறப்பு விகிதத்தை பரிந்துரைப்பதாகவும், ஆனால் 0.1 குழந்தை என்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால், இதை மூன்று குழந்தைகளாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.
இந்தியாவின் மக்கள்தொகை 1.5 பில்லியனை எட்டியுள்ள நிலையில், ஐ.நா.வின் 2025 உலக மக்கள்தொகை அறிக்கையின்படி, இந்தியாவின் பிறப்பு விகிதம் 1.9 ஆகக் குறைந்து, மாற்று நிலை 2.1-ஐ விடக் கீழே சென்றுள்ளது. இதனால், மக்கள்தொகை சமநிலையைப் பேணுவதற்கு மூன்று குழந்தைகள் அவசியம் என்று பகவத் வலியுறுத்தினார்.
மேலும், மூன்று குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள், பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றில் நன்மை பயக்கும் என்றும், இது குழந்தைகளிடையே தன்முனைப்பு (ego) மற்றும் உடன்பிறப்புகளுக்கு இடையேயான மோதல்களைக் கையாளும் திறனை வளர்க்கும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அவர் எதுக்கும் ஆசைப்பட்டது கிடையாதுங்க… நல்லக்கண்ணு-வை நலம் விசாரித்த சீமான் நெகிழ்ச்சி
மோகன் பகவத் பேச்சுக்கு சீமான் பதிலடி கொடுத்தார். நீ சொன்னா நான் பெத்துக்கணுமா என்றும் மூன்று பிள்ளைய பெத்தா யார் வளர்ப்பா என்றும் கேள்வி எழுப்பினார். இருப்பதற்கே வீடு இல்லாமல் தார்பாய்களைக் கொண்டு வீடு அமைத்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார். இந்துக்கள் மட்டும் மூன்று பிள்ளைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமா அல்லது அனைத்து மதத்தினரும் பெற்றுக் கொள்ளலாமா என்று கேட்டு சொல்லுங்கள் எனவும் சீமான் கேட்டார்.
இதையும் படிங்க: NO PLASTICS.. மரங்களின் மாநாட்டில் தயவு செஞ்சு விதிகளை கடைப்பிடிங்க! சீமான் அறிவுறுத்தல்..!