சசி தரூர் மகனின் சீட்டை கிழித்த வாஷிங்டன் போஸ்ட்..!! 300 பேர் டிஸ்மிஸ்..!! நஷ்ட கணக்கு காட்டும் பத்திரிகை..!!
சசி தரூரின் மகன் இஷான் தரூரை தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.
திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசின் சில செயல்பாடுகளை பாராட்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இது காங்கிரஸ் கட்சியின் உள்ளே பெரும் விவாதத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், சசி தரூரின் மகன் இஷான் தரூர், அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தி நிறுவனமான 'தி வாஷிங்டன் போஸ்ட்' இதழில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 4, 2026 அன்று நடைபெற்ற பெரும் பணி நீக்க நடவடிக்கையில், இந்நிறுவனத்தின் ஊழியர்களில் சுமார் ஒரு மூன்றில் ஒரு பங்கு அதாவது 300க்கும் மேற்பட்டோர் வேலையை இழந்துள்ளனர்.
இதையும் படிங்க: ட்ரம்ப் பதவிக்காலம் முடியட்டும்?! பார்த்துக்கலாம்?! மோடி போடும் ஸ்கெட்ச்! பணிந்தது அமெரிக்கா!
இந்த பணி நீக்கம் சர்வதேச செய்தி பிரிவு, விளையாட்டு பிரிவு, புத்தகங்கள் தொடர்பான பிரிவு ஆகியவற்றை பெரிதும் பாதித்துள்ளது. பல வெளிநாட்டு செய்தி பிரிவுகள் (பீரோக்கள்) மூடப்பட்டுள்ளன. இஷான் தரூர், தி வாஷிங்டன் போஸ்ட்டில் சுமார் 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர். அவர் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 'WorldView' என்ற புகழ்பெற்ற பத்தியை தொடங்கினார்.
இந்த பத்தி உலக அரசியல் நிகழ்வுகளையும், அமெரிக்காவின் உலக அரங்கில் உள்ள இடத்தையும் வாசகர்களுக்கு எளிமையாகவும் ஆழமாகவும் விளக்கும் வகையில் அமைந்திருந்தது. வாரத்திற்கு பல முறை வெளியாகும் இந்த பத்தியை ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட விசுவாசமான சந்தாதாரர்கள் தொடர்ந்து படித்து வந்தனர். சர்வதேச விவகாரங்கள் தொடர்பான மூத்த பத்திரிகையாளராக (senior international affairs columnist) பணியாற்றிய இவர், பல ஆண்டுகளாக உலக அளவில் கவனம் பெற்ற கட்டுரைகளை எழுதி வந்தார்.
பணிநீக்கம் குறித்து இஷான் தரூர் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார். "இன்று தி வாஷிங்டன் போஸ்ட்டில் இருந்து நான் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளேன். சர்வதேச பிரிவில் உள்ள பெரும்பாலான ஊழியர்களுடனும், எனது பல அருமையான சக ஊழியர்களுடனும் இணைந்து இந்த நடவடிக்கை நடைபெற்றுள்ளது. இந்த செய்தி அலுவலகத்திற்காகவும், குறிப்பாக கடந்த 12 ஆண்டுகளாக எனது நண்பர்களாகவும் ஒத்துழைப்பாளர்களாகவும் இருந்த ஆசிரியர்கள், நிருபர்கள் மற்றும் சர்வதேச பத்திரிகையாளர்களுக்காகவும் மனம் உடைந்துள்ளேன். அவர்களுடன் பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய மரியாதையாக இருந்தது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "உலகத்தையும் அமெரிக்காவின் இடத்தையும் வாசகர்கள் சிறப்பாக புரிந்துகொள்ள உதவும் வகையில் WorldView பத்தியை தொடங்கியதில் பெருமிதம் கொள்கிறேன். பல ஆண்டுகளாக வாரத்திற்கு பல முறை இதை படித்த 5 லட்சம் விசுவாசமான சந்தாதாரர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பெரும் பணி நீக்க நடவடிக்கை, ஜெஃப் பெஸோஸ் உரிமையில் உள்ள தி வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இது உலக அளவிலான பத்திரிகைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவை வடக்கு தொகுதியில் போட்டியா..?? வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பளீச் பேட்டி..!!