×
 

ஈரான் - இஸ்ரேல் போரில் சீனா குதூகலம்! 12 நாளில் 11 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய் விநியோகம்!

போர் தொடங்கிய காலத்தில் இருந்து கிட்டத்தட்ட 11 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் கச்சா எண்ணெய்யை ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக சீனாவுக்கு ஈரான் அனுப்பி உள்ளது.

டெல்லி/துபாய்: ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் ஹோர்மூஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. உலகின் 20% கச்சா எண்ணெய் போக்குவரத்து இந்த ஜலசந்தி வழியாகத்தான் நடக்கிறது. இதனால் வர்த்தக கப்பல்கள் முடங்கியுள்ளன. கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 120 அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது. உலக அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அச்சம் எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் சரணடைவதே தீர்வு என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். ஆனால் ஈரான் போரை தொடர்ந்து நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் மீண்டும் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

இந்த பதற்றத்திற்கு மத்தியில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக ஈரான் சீனாவுக்கு கிட்டத்தட்ட 11.7 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் கச்சா எண்ணெய் அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்காவின் அடுத்த டார்கெட் வடகொரியா?! கிம் ஜாங் உன்-னை குறிவைக்கும் டிரம்ப்!! அதிகரிக்கும் பதற்றம்!

இதை கடல்சார் புலனாய்வு நிறுவனமான டேங்கர் டிராக்கர்ஸின் இணை நிறுவனர் சமீர் மதானி வெளியிட்டுள்ளார். செயற்கைக்கோள் மூலம் கப்பல் இயக்கங்களை கண்காணிக்கும் இந்நிறுவனத்தின் தகவல் நம்பகமானது.

அதேபோல், மற்றொரு கப்பல் புலனாய்வு நிறுவனமான கெப்ளர் (Kpler) சுமார் 12 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் ஹோர்மூஸ் வழியாக சீனாவுக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக ஈரானின் கச்சா எண்ணெய்யை அதிக அளவு வாங்கும் நாடாக சீனா உள்ளது என்றும் கெப்ளர் கூறியுள்ளது.

ஜலசந்தி மூடப்பட்ட நிலையில் பெரும்பாலான கப்பல்கள் செல்ல மறுத்தாலும், ஈரான்-சீனா இடையேயான சிறப்பு உறவு காரணமாக இந்த ஏற்றுமதி தொடர்ந்து நடைபெற்றுள்ளது. சீனா உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதி நாடு. ஈரானின் எண்ணெய் அதற்கு முக்கியமானது. இருப்பினும், ஜலசந்தி மூடல் சீனாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனா ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்தி சில கப்பல்களுக்கு பாதுகாப்பு கோரியுள்ளது.

இந்த சம்பவம் உலக பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலைகள் ஏறும் அபாயம் உள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. போர் முடிவுக்கு வரும் வரை இந்த பதற்றம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஈரான் போரை எப்போ முடிக்கலாம்?! இஸ்ரேல் பிரதமர், அமெரிக்க அதிபர் பேச்சு?! வருமா போர்நிறுத்தம்?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share