×
 

எதிரிகளுக்கு இடமில்லை! ஹார்மூஸ் ஜலசந்தி குறித்து ஈரானின் அதிரடி திட்டவட்டம்!

ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக மற்ற நாடுகளின் கப்பல்கள் சுதந்திரமாகப் பயணிக்கலாம். ஆனால், ஈரான் மீது தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற எங்களது எதிரிகளுக்கும் இந்த வழித்தடத்தில் இடமில்லை அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹார்மூஸ் ஜலசந்தி குறித்து ஈரான் தனது கடுமையான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது. ஆனால் அது எங்கள் எதிரிகளுக்கு அல்ல" என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக மற்ற நாடுகளின் கப்பல்கள் சுதந்திரமாகப் பயணிக்கலாம். ஆனால், ஈரான் மீது தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற எங்களது எதிரிகளுக்கும் இந்த வழித்தடத்தில் இடமில்லை. அவர்களது கப்பல்கள் மற்றும் டேங்கர்கள் எங்களது இலக்குகளாகக் கருதப்படும் என ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

ஈரானின் புதிய உச்சநிலைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமேனி, ஹார்மூஸ் ஜலசந்தியை ஒரு அழுத்தக் கருவியாக ஈரான் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வு! ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்த இரு இந்திய LPG கப்பல்கள்!

சர்வதேச அளவில் பல நாடுகளின் கப்பல்கள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவுடனான நட்பு ரீதியான உறவைக் கருத்தில் கொண்டு, இந்தியக் கொடி ஏந்திய ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இரு LPG டேங்கர் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

ஈரானின் இந்த 'தேர்வு செய்யப்பட்ட' தடையை முறியடிக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச நாடுகளின் கடற்படை கூட்டணியை உருவாக்கி, கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளார். ஹார்மூஸ் ஜலசந்தியை விரைவில் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான பாதையாக மாற்றுவோம் என அவர் சூளுரைத்துள்ளார்.

ஹார்மூஸ் ஜலசந்தியில் நிலவும் இந்த இழுபறியால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளது. இது உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.


 

இதையும் படிங்க: அப்பாடா...!! - இந்தியாவை நிம்மதி பெருமூச்சு விட வைத்த ஈரான்... ஹார்மூஸ் நீரிணை விவகாரத்தில் முக்கிய முடிவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share