எப்படியெல்லாம் சாவு வருது... குறுக்கே சட்டென வந்த தெருநாய்... மனைவி கண்முன்னே பறிபோன கணவன் உயிர்...!
மதுரையில் தெருநாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி பைக்கில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார்
தெரு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட ஒரு சிக்கலான சமூகப் பிரச்சனையாக உள்ளது. இந்தியா போன்ற பல நாடுகளில், குறிப்பாக நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும், தெரு நாய்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. இவை மனிதர்களுடன் இணைந்து வாழ்ந்தாலும், அவை ஏற்படுத்தும் பிரச்சனைகள் சமூகத்தில் கவலைக்குரிய விஷயமாக உள்ளன.
தெரு நாய்களால் ஏற்படும் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று, அவை மனிதர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்படுத்தும் அச்சுறுத்தல். தெரு நாய்கள், குறிப்பாக பயந்த அல்லது ஆக்ரோஷமான நிலையில், மனிதர்களைக் கடிக்கலாம். இது வெறிநாய்க் கடி (ரேபிஸ்) போன்ற ஆபத்தான நோய்களைப் பரப்புவதற்கு வழிவகுக்கிறது. உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்படுகின்றனர்.
இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் முதியவர்கள். இது மருத்துவச் செலவுகளை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. தெருநாய்கள் சாலைகளில் உலாவுவது, வாகனங்களின் குறுக்கே செல்வதால் விபத்துகளும் ஏற்படுகிறது. தெருநாய்கள் பிரச்சனையை தீர்க்க உச்சநீதிமன்றம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதையும் படிங்க: தரைப்பாலத்தில் கிடந்த தலையில்லாத முண்டம்... காணாமல் போன இளைஞர் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்...!
அந்தந்த மாநகராட்சிகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மதுரை சிக்கந்தர் சாவடியில் தெருநாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்ற தம்பதி தடுமாறி கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில் அரசுப் பேருந்து மோதி கணவர் வெங்கட சுப்பு என்பவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மனைவி பத்மாவதி அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு முன் ஆண், பெண் உறவு... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தீர்ப்பு...!