×
 

தாடி ஏன் சின்னதா இருக்கு?! ஆப்கனில் ஐ.நா., ஊழியர்கள் கைது!! தலிபான் ஒழுக்க நெறி போலீசார் நடவடிக்கை!

நாட்டின் விதிகளை மீறியதாக, ஈரான் எல்லை அருகே பணியாற்றி வந்த, ஐ.நா., அமைப்புகளைச் சேர்ந்த 20 ஊழியர்களை, ஆப்கானிஸ்தானின் தலிபான் ஒழுக்க நெறி போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆப்கானிஸ்தானில் ஈரான் எல்லை அருகே பணியாற்றி வந்த ஐநா அமைப்புகளின் 20 ஊழியர்கள், உள்ளூர் சட்ட விதிகளை மீறியதாக கூறி தலிபான் ஒழுக்க நெறி போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெராத் மாகாணத்தில் அமைந்துள்ள இஸ்லாம் காலா நகரம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளை இணைக்கும் முக்கிய எல்லை வர்த்தக வழித்தடமாக உள்ளது. இப்பகுதியில் உலக சுகாதார அமைப்பு மற்றும் இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு உள்ளிட்ட ஐநா மனிதாபிமான அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த அமைப்புகளில் பணியாற்றும் 20 ஊழியர்கள் நேற்று திடீரென தலிபான் ஒழுக்க நெறி போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது நடவடிக்கை உள்ளூர் விதிமுறைகள் மற்றும் ஒழுங்கு சட்டங்களை பின்பற்றாத காரணத்தால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் மீது குண்டுவீச்சு! கோரமுகம் காட்டிய பாக்.,! குழந்தைகள் உட்பட 13 பேர் பலி!

தலிபான் நிர்வாகத்தின் சட்ட விதிகளின்படி, ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் ஆண்கள் முழுமையான தாடி வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் கைது செய்யப்பட்ட ஊழியர்கள் அந்த விதியை முழுமையாக பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சிலர் முற்றிலும் தாடி மழித்திருந்ததாகவும், சிலர் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு குறைவாக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடிப்படையாக கொண்டு அவர்களை போலீசார் கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கைது செய்யப்பட்டவர்கள் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்படாமல் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், மனிதாபிமான பணிகளில் ஈடுபடும் சர்வதேச அமைப்புகளுக்கும் உள்ளூர் சட்ட விதிகள் கட்டாயம் என்பதைக் காட்டும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தலிபான் தரப்பு தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த சம்பவம் ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் சர்வதேச அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. மனிதாபிமான பணிகள் நடைபெறும் சூழலில் இத்தகைய கட்டுப்பாடுகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் மீது குண்டுவீச்சு! கோரமுகம் காட்டிய பாக்.,! குழந்தைகள் உட்பட 13 பேர் பலி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share